மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். மக்கள் சமைத்த உணவினை வீண் விரயம் செய்வது குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கடந்த வருடங்களில் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் உணவுக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 180 மெற்றிக் தொன் உணவுக்கழிவுகளே சேகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Author: admin
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வதுடன், பலர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தயாராக உள்ளனர். இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறி மோசடியாகப் பணம் பெறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொடர்பாக பல தகவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரேனும் நபருக்கு அல்லது ஏஜன்சி நிறுவனத்திற்கு வெளிநாடு செல்வதற்காகக் கடவுச்சீட்டை அல்லது பணத்தை வழங்குவதற்கு முன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து அல்லது 1989 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு குறித்த வெளிநாட்டு முகவர் நிறுவனம் சட்ட ரீதியாக பதிவுசெய்யப்பட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் அம்பாறை மற்றும் கல்முனை நகரங்களை மையமாகக் கொண்டு அனுமதிப் பத்திரமின்றி செயற்படும் சுயதொழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை சுற்றி வளைத்து இரண்டு…
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சீரான நிலையில் காணப்பட்டாலும், இன்று (11) தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றமடைந்துள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, சிலவற்றின் விலைகள் மிகவும் சிறிதளவு அதிகரித்திருந்தாலும், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் சரிவைக் காணலாம். ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலை 170,900 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, ஒரு பவுண் (22 கரட்) தங்கத்தின் விலை 156,750ஆக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு பவுண் (21 கரட்) தங்கத்தின் விலையானது 149,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ;பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (10 கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்விகற்று வருகின்றார் இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி விடுதி அமைந்துள்ள பாடசாலையின் அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு வரவழைத்து அந்த மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ஆம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் அவரை தாக்கிய போது வீடுயோ படம் எடுத்துள்ளனர். இந்த அதிபர் மீது தாக்குதல் நடாத்திய வீடியோ…
இலங்கையை தரமிறக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றி, எதிர்கால கடன்களை எளிதாக்கும் வகையில் இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பதுளை கொக்காகலை பெருந்தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகி மெட்டிக்காதென்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடூல்சீமைப் பகுதியின் கொக்காகலை பெருந்தோட்டத்தலேயே, குறித்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.பெண் தொழிலாளர்கள், தேயிலைத் தளர் கொய்யும் தொழிலில் இருக்குபோது, குளவிக் கூடொன்று கலைந்து, தொழிலாளர்களை கொட்டத் தொடங்கின. உடனடியாக ஏனைய தொழிலாளர்கள் குளவிகளை அகற்ற நடவடிக்கைகளை எடுத்ததோடு, தோட்ட லொறியின் மூலம், குளவி கொட்டிய நான்கு பெண் தொழிலாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
26/09/2022 திங்கட்கிழமை அன்று கல்முனை கரையோரப் பகுதிக்குச் சொந்தமான கல்முனையைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் பல கனவுகளுடன் ஆழ்கடலுக்குப் புறப்பட்டனர். வழக்கமாக ஐந்து அல்லது ஆறு நாட்களில் கரை திரும்பும் நமது சகோதரர்கள் இன்றுடன் (6/7/2022) 17 நாட்கள் கடந்தும் கரை திரும்பவில்லை. யா அல்லாஹ்! இரக்கமுள்ள ரப்பே! எங்கள் பாதுகாவலனே! நம் சகோதரர்கள் சீக்கிரமாக, எந்தத் தீங்கும் இன்றி வீட்டை வந்தடையட்டும். அவர்களின் உறவுகளுக்கு அல்லாஹ் உனது அருளையும் பாதுகாப்பையும் வழங்குவாயாக! நண்பர்களே !கடலுக்குச் சென்ற நம் சகோதரர்களுக்காகவும் அவர்களின் உறவினர்களுக்காகவும் அல்லாஹ்விடம் அதிகமாகப் பிரார்த்திப்போம்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பிராந்தியத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல் ஆவணம் நேற்று (திங்கட்கிழமை) பணிமனையின் கேட்போர்கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய தொற்று நோய்த்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பசால் அவர்களின் ஏற்பாட்டில் பூச்சியியல் உத்தியோகத்தர் கே.ஏ ஹமீட் அவர்கள் மற்றும் குழுவினர் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். பொருளாதார முகாமைத்துவம் கருதி மென்பொருள் ஆவணமாக வெளியிடப்பட்ட இப்பிரதிகள் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திடீர் சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும் 29 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சில மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், சில மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களில் நிலை சாதாரணமாக உள்ளதென்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.