மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ;பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (10 கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்விகற்று வருகின்றார் இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி விடுதி அமைந்துள்ள பாடசாலையின் அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு வரவழைத்து அந்த மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ஆம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் அவரை தாக்கிய போது வீடுயோ படம் எடுத்துள்ளனர். இந்த அதிபர் மீது தாக்குதல் நடாத்திய வீடியோ படம் வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்..
இதேவேளை அதிபர் தன் மீது சிஜடி எனத் தெரிவித்து 4 பேர் தாக்குதல் நடத்தியதாவவும் அவர்களை அடையாளம் தெரியாது எனவும் வெளியாகிய வீடியோவை ஆதாரமாக வழங்கி தாக்குதல் நடாத்தியவர்களுக்கு எதிராக அதிபர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது