பிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஓய்வூதிய வயதெல்லையினை 62ல் இருந்து 64 ஆக அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானித்திற்கு தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையானது பிரான்ஸ் போக்குவரத்து மற்றும் பொது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீஸ் நகரில் இன்று பாரிய போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இன்று பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதுடன் பாடசாலைகள் ட மூடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.