பதுளை கொக்காகலை பெருந்தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகி மெட்டிக்காதென்ன பிரதேச
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மடூல்சீமைப் பகுதியின் கொக்காகலை பெருந்தோட்டத்தலேயே, குறித்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.பெண் தொழிலாளர்கள், தேயிலைத் தளர் கொய்யும் தொழிலில்
இருக்குபோது, குளவிக் கூடொன்று கலைந்து, தொழிலாளர்களை கொட்டத் தொடங்கின.
உடனடியாக ஏனைய தொழிலாளர்கள் குளவிகளை அகற்ற நடவடிக்கைகளை எடுத்ததோடு, தோட்ட லொறியின் மூலம், குளவி கொட்டிய நான்கு பெண் தொழிலாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.