26/09/2022 திங்கட்கிழமை அன்று கல்முனை கரையோரப் பகுதிக்குச் சொந்தமான கல்முனையைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் பல கனவுகளுடன் ஆழ்கடலுக்குப் புறப்பட்டனர்.
வழக்கமாக ஐந்து அல்லது ஆறு நாட்களில் கரை திரும்பும் நமது சகோதரர்கள் இன்றுடன் (6/7/2022) 17 நாட்கள் கடந்தும் கரை திரும்பவில்லை.
யா அல்லாஹ்! இரக்கமுள்ள ரப்பே! எங்கள் பாதுகாவலனே! நம் சகோதரர்கள் சீக்கிரமாக, எந்தத் தீங்கும் இன்றி வீட்டை வந்தடையட்டும்.
அவர்களின் உறவுகளுக்கு அல்லாஹ் உனது அருளையும் பாதுகாப்பையும் வழங்குவாயாக!
நண்பர்களே !கடலுக்குச் சென்ற நம் சகோதரர்களுக்காகவும் அவர்களின் உறவினர்களுக்காகவும் அல்லாஹ்விடம் அதிகமாகப் பிரார்த்திப்போம்.