மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இன்று (06) காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் காசல்ரீ நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் உபரி நீர் மட்டம் சுமார் ஒரு அடி உயரத்தை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். காசல்ரி மற்றும் மவுஸ்ஸகலே நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் மூலம் கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான மற்றும் விமலசுரேந்திர நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்படும் என நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
Author: admin
இவ்வருடம் இலங்கையிலிருந்து உம்ரா யாத்ரீகர்களை அழைத்துச்செல்லும் அனைத்து பயண வழிகாட்டிகளும் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. உம்ரா யாத்ரீகர்கள் இத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள பயண வழிகாட்டிகளை (travel operators) மட்டுமே தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். திணைக்களத்திற்கு தேவையான அனைத்து தூதரக மற்றும் நலன்புரி உதவிகளையும் வழங்கவும், வழிகாட்டிகள் (travel operators) உறுதியளித்த படி உம்ரா பயணக் குழுக்களால் யாத்ரீகர்களுக்கு முறையான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உதவும் எனவும் இத் திணைக்களம் அறிவித்துள்ளது. உம்ரா யாத்ரீகர்கள் அனைவரும் இத திணைக்களத்தின் ஹஜ் மற்றும் உம்ரா பிரிவைச் ஆராய்ந்து , யாத்ரீகர்கள் பயணத்திற்க்கான முன்பதிவு செய்வதற்கு முன் குறிப்பிட்ட பயணவழிகாட்டிகள் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2022 ஆம் ஆண்டிற்கான பதிவு செய்யப்பட்ட பயண வழிகாட்டிகள் (ஹிஜ்ரி 1444)…
வெள்ளிக்கிழமை (05) அதிகாலை வத்தளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 35-40 வயதுடையவராகவும் அண்ணளவாக 5 அடி 8 அங்குல உயரமுடையவராகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் யாருடையது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி, கட்டம்பேயில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவிழா ஒன்றில் மதுபோதையில் இருந்த கூட்டத்தை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 30 மற்றும் 46 வயதுடைய உடபேரதெனிய மற்றும் பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த தோட்டத்திலிருந்து கொட்டகலை நகரில் உள்ள பாடசாலைகள், ஸ்டோனிகிளிப் த.வி, கொட்டகலை த.ம.வி ஆகிய பாடசாலைகளுக்குச் சென்று வருகின்ற சில மாணவர்கள் உள்ளதுடன், வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்ற பலரும் உள்ளனர். இவர்களின் பிரதான பாதையாக இருந்த சிறிய ரக பாலம், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஊடான போக்குவரத்தே இவர்களுக்கு வசதியாக இருந்தது. மாற்றுப் பாதை ஒன்றின் ஊடாக செல்வதென்றால் காட்டுப்பாதை ஒன்றின் ஊடாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய அதிகாரிகள் இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக மாற்று வழியை அமைத்துக் கொடுக்க வேண்டும்…
மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவி வருவதனால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆபத்தான நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் மக்கள் நீராடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் ராவணா நீர்வீழ்ச்சி, தியலும நீர்வீழ்ச்சி, துன்ஹிந்த நீர்வீழ்ச்சி, மொனராகலை மாவட்டத்தில் எல்லேவல நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸாரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பாரியளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 1 கிலோ பருப்பின் விலை சுமார் 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கல்முனை கிறீன்ட் பீல்ட் குடியிருப்பு பகுதியை அண்மித்து காணப்படும் நீரோடையின் பாதுகாப்பு அணை மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுகின்ற மையினால் இதனை உடனடியாக சீர் செய்யுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் குறித்த நீரோடைக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அணை உடைந்து காணப்படுவதனால் நீர் சென்று மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிலப்பகுதி தாழ் இறங்கி காணப்படுவதுடன் அருகிலுள்ள வீதிக்கும் பாதிப்பு எற்ப்படும் நிலையை அவதானிக்க முடிகின்றது. சுமார் 400க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள், கல்முனை கிறீன்ட் பீல்ட் குடியிருப்பு பகுதியில் வசித்து வருவதுடன் அரச காரியாலயத்திற்க்கு வேலைக்கு செல்வோர்,பாடசாலை மாணவர்கள்,விவசாயிகள் பொது மக்கள் என பலரும் நாளாந்தம் குறித்த நீரோடைக்கு அருகில் உள்ள வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது மேலும் நீரோடை பகுதியில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து உள்ளதுடன் நீரோடைக்கு அருகில் வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் குப்பைகள் உள்ளதையும் காண முடிகின்றது. அத்துடன் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீரோடையினால் அதிகமாக நீர்…
இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கையில் , இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான, விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்த உளவுக் கப்பல் ஒகஸ்ட் 11-ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒகஸ்ட் 17-ம் திகதி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.எனினும் இந்த கப்பல் பயணத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிவிக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது. இதனையடுத்தே கப்பல் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை, சீனாவிடம் கோரியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. யுவான் வாங் 5 கப்பல். ஜூலை 13 அன்று சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்டு தற்போது தாய்வானுக்கு அருகில் ஹம்பாந்தோட்டையை நோக்கி பயணிக்கிறது. இந்தநிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சகம், சீனாவின் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை ஒத்திவைக்கும் கோரிக்கையை முறையான இராஜதந்திர வழிகள் மூலம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் சக அதிகாரிகளுக்கு…
மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளுக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. SLTB டிப்போக்களுக்கு மேலதிகமாக, பஸ்டியன் மாவத்தை பஸ் முனையம் மற்றும் மகும்புர எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் இந்த பஸ்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியும் என NTC பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார். தனியார் பஸ் சங்கங்கள் நேற்று (05) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அன்றைய தினமே அதனை கைவிட்டன. தொடர்ந்து எரிபொருள் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டதால், பேருந்து சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.