மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இன்று (06) காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் காசல்ரீ நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் உபரி நீர் மட்டம் சுமார் ஒரு அடி உயரத்தை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
காசல்ரி மற்றும் மவுஸ்ஸகலே நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் மூலம் கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான மற்றும் விமலசுரேந்திர நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்படும் என நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.