இவ்வருடம் இலங்கையிலிருந்து உம்ரா யாத்ரீகர்களை அழைத்துச்செல்லும் அனைத்து பயண வழிகாட்டிகளும் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உம்ரா யாத்ரீகர்கள் இத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள பயண வழிகாட்டிகளை (travel operators) மட்டுமே தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
திணைக்களத்திற்கு தேவையான அனைத்து தூதரக மற்றும் நலன்புரி உதவிகளையும் வழங்கவும், வழிகாட்டிகள் (travel operators) உறுதியளித்த படி உம்ரா பயணக் குழுக்களால் யாத்ரீகர்களுக்கு முறையான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உதவும் எனவும் இத் திணைக்களம் அறிவித்துள்ளது.
உம்ரா யாத்ரீகர்கள் அனைவரும் இத திணைக்களத்தின் ஹஜ் மற்றும் உம்ரா பிரிவைச் ஆராய்ந்து , யாத்ரீகர்கள் பயணத்திற்க்கான முன்பதிவு செய்வதற்கு முன் குறிப்பிட்ட பயணவழிகாட்டிகள் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2022 ஆம் ஆண்டிற்கான பதிவு செய்யப்பட்ட பயண வழிகாட்டிகள் (ஹிஜ்ரி 1444) விபரம் பின்வருமாறு.
பயண முகவர்களின் பெயர் மற்றும் முகவரி
1. Kara Travels & Tours (Pvt) Ltd
No. 06, R.A.Demel Mawatha, Bambalapitiya, Colombo -04
2. Intersun Travels
No. 90, York Street, Colombo -01
3. Amja Travels (Pvt) Ltd
No. 22, Dias Place, Colombo -12
4. Careem Lanka Travels & Tours (Pvt) Ltd
No. 95, Chatham Street, Colombo-01
5. The Traveller Global (Pvt) Ltd
No. 70/14j, Lucky Plaza, St. Anthony’s Mawatha, Colombo -3