இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கையில் ,
இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான, விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்த உளவுக் கப்பல் ஒகஸ்ட் 11-ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒகஸ்ட் 17-ம் திகதி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.எனினும் இந்த கப்பல் பயணத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிவிக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது.
இதனையடுத்தே கப்பல் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை, சீனாவிடம் கோரியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
யுவான் வாங் 5 கப்பல். ஜூலை 13 அன்று சீனாவின் ஜியாங்யினில் இருந்து புறப்பட்டு தற்போது தாய்வானுக்கு அருகில் ஹம்பாந்தோட்டையை நோக்கி பயணிக்கிறது.
இந்தநிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சகம், சீனாவின் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை ஒத்திவைக்கும் கோரிக்கையை முறையான இராஜதந்திர வழிகள் மூலம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் சக அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பியுள்ளது.