இந்திய தமிழகத்தின் திருத்தணி அருகே, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையின் மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்தில் குறித்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. சதாம் உசேன் என்பவரது 2 வயது ஆண் குழந்தையான சூபியன், நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்தவர்கள் முன்னறையில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது டி.வி மேசையைப் பிடித்து குழந்தை இழுத்தபோது, எதிர்பாராத விதமாக டி.வி, குழந்தையின் மார்பு மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனே பெற்றோர், குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Author: admin
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்காக சர்வதேச அணிகள் தயாராகி வரும் நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இந்தியா அணியில் உபாதைக் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு பதிலாக, மொஹமட் ஷமி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதேபோல பாகிஸ்தான் அணியில், காயத்தில் இருந்து போதுமான அளவு மீளத் தவறிய உஸ்மான் காதிருக்குப் பதிலாக காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஃபகஹர் ஸமானை 15 பேர் கொண்ட அணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இணைத்துள்ளது. உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியில் சௌமியா சர்க்கார் மற்றும் ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோரை பங்களாதேஷ் சேர்த்துள்ளது. சபீர் ரஹ்மான் மற்றும் முகமது சைஃபுதீன் ஆகியோரின் செயல்திறனில் அணி நிர்வாகம் மகிழ்ச்சியடையாததால், இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடர், நாளை தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன்…
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டசன் கணக்கானவர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர். ஆனால் 110 பேர் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், பதினேழு பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா டுவிட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக, உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, வெடிப்பின் போது, 49 பேர் 300 மீட்டர் மற்றும் 350 மீட்டர் (985 முதல் 1,148 அடி) நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். இது ஆபத்தான மண்டலம் என்று விபரித்தார். சுரங்கத்தினுள் தீ விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை, உள்ளே காற்றோட்டம் சரியாக வேலை செய்கிறது, சுரங்கத்திற்குள் பகுதி சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இந்த வெடிப்பு சுரங்கத்தின் நுழைவாயிலுக்கு கீழே 300 மீட்டர் (985 அடி) அளவில் நிகழ்ந்ததாக பார்டின்…
நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸ்ஸலாவை ஆகிய பிரதேசங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பிரதேச மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.மேலும் பணி புகை மூட்டம் காரணமாக பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்த சாரதிகள் அசௌகரிகங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாரிய மண்மேடுகள், மற்றும் ஆற்று ஓரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் வசிப்போர்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பணியகம் எச்சரிக்கை விடுத்திருப்பது பணியகத்தின் கள பணிப்பாளர் ரஞ்சித் அலககோன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் மண்சரிவுகள் அபாயம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் அது தொடர்பில் பிரதேச மக்கள் அவ்வப்பகுதி கிராம சேவகர்களின் கவனத்திற்கு அறிவிக்குமாறும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சீனாவின் கொரோனா பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் மஹிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார். இதன்போது இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமல் எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் திருகோணமலையில் நேற்று (14) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை பகிர்ந்துள்ளார். இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு வளர்ப்பு நாயொன்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மெய்ப்பாதுகாவலர் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகின்றது.
தங்க நகைகளுடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடத்தல் நோக்கத்துடன் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகிறது. இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். எவ்வாறாயினும், இதனால் சாதாரண பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலில் மசூரா மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து முரண்பாடுகளுடன் கூடிய பிரச்சினையொன்று பன்சலை வரை சென்று தற்காலிகமாக சமாதானம் செய்து வைக்கப்பட்டுள்ளது.’ இப்பள்ளிவாசலின் பிரச்சினை ஏற்கனவே வக்பு சபையில் முறையிடப்பட்டு தற்போது விசாரணையின் கீழ் உள்ளது. கிந்தோட்ட கடற்கரைக்கு அண்மையிலுள்ள அவ்லியா மலைப்பள்ளியின் பிரச்சினையே கிந்தோட்டை துன்மஹல் விகாரை வரை சென்றுள்ளது. துன்மஹல் விகாரை அதிபதி வீரகெட்டிய சஞ்சய தேரர் பள்ளிவாசலில் முரண்பட்டுக்கொண்ட இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சினை தொடர்பில் விசாரணை நடாத்தி இரு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார். எனினும் இந்த முரண்பாடுகள் பள்ளிவாசல் சம்பிரதாய முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியான பிரச்சினை அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் கிந்தோட்டை அவ்லியாமலை பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், ‘இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் ஒரு குடும்பத்தினராவர். இவர்கள் அயல் பிரதேசத்தவர்களாவர். இவர்கள் பிரதேச தக்கியாக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். இவர்கள் அவ்லியா மலைப்…
இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வங்கியில் பணமின்றி இந்த காசோலைகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாரியளவிலான தொகை காசோலைகள் நிராகரிக்கப்பட்டமை பாரிய பிரச்சினை என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீட் ஜீரான் தெரிவித்துள்ளார். இதனால் அநேகமான வியாபாரங்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2022ம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு பகுதிகளில் சுமார் 250,000 காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன. முதலாம் காலாண்டில் சுமார் 192300 காசோலைகள் நிராகரிக்கப்பட்டன. காசோலை நிராகரிப்பு சந்தர்ப்பங்கள் முதலாம் காலண்டில் 2.1 வீதமாக காணப்பட்டதாகவும் இரண்டாம் காலாண்டு பகுதியில் இது 3.2 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.