அடுத்த ஆண்டு முதல், தரம் ஒன்றிலிருந்து உயர் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், தற்போது இந்த வசதி ஆறாம் தரத்திற்கு மேல் உள்ளதுதாகவும் கல்வியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Author: admin
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கம்பளை – அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது – 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று (19.10.2022) இடம்பெறவிருந்தன. சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது இந்நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் ஒன்று மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார். இதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. எனவே, அவற்றை அகற்றி, தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கோண்டாவிலில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியை நேற்றைய யாழ் மாநகர சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டாக நிராகரித்து. யாழ் மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளது. குறித்த ஆதனத்தில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் உள்ள பொதுமக்களிற்கு நீர் விநியோகம் செய்கின்ற கிணறுகள் அமைந்துள்ளன. எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோகப் பணி ஆரம்பிக்கப்பட இருப்பதைக் கருத்திற் கொண்டு குறித்த நீர் விநியோகத்திற்கு எவ்விதபங்கமேற்படாதவாறு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றினை குறித்த ஆதனத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் அனுமதியினை மாநகர முதல்வர் கோரியிருந்தார். குறித்த அனுமதியினை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன கூட்டாக…
கொள்ளுப்பிட்டி C எவென்யு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சடலம் சுமார் 40 முதல் 50 வயதுடைய ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் வளர்க்கும் நாயொன்று செய்த நல்ல செயலால் அந்த குடும்பமே குதூகலித்த சம்பவமொன்று கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு வெளியே கடந்த 15ஆம் திகதியன்று இரவுவேளையில் வெளியே சென்றிருந்த அந்த நாய், கடையொன்றுக்கு முன்பாகவுள்ள வீதியில் விழுந்துகிடந்த பணப்பையை கௌவிக்கொண்டுவந்து, தன்னுடைய கூடாரத்துக்கு அருகில் போட்டுவிட்டுள்ளது. பாதணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் கடிக்கும் அந்த நாய், அந்த பணப்பையை மட்டும் கடித்து சேதப்படுத்தாது, முன்னங்கால்கள் இரண்டிலும் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்துள்ளது. எனினும், வீட்டின் உரிமையாளர்கள் அந்த பையை நாயிடமிருந்து மீட்டெடுத்து, அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில், 7ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான தங்கச் சங்கிலியும் இருந்துள்ளது. அத்துடன் அந்த பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட வீட்டு உரிமையாளர்கள், உரிமையாளரை வீட்டுக்கு அழைத்து அந்தப் பணப்பையை கையளித்துள்ளனர். இதுதொடர்பில் அலதெனிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தியுள்ளனர். பொலிஸாருடன் வீட்டுக்கு வந்த பணப்பையின் உரிமையாளர் அதனை பெற்றுச்சென்றுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் தேரர் ஒருவரும் அடங்குவார். அவர்கள் தற்போது வத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள IUSF உறுப்பினரை உடனடியாக விடுவிக்கக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு முன் அனுமதி பெறாததால், போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் நோட்டீஸ் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் கப்பமாக பெருந்தொகையான பணம் கோரிய பெண் உள்ளிட்ட கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணையும் அவருக்கு உதவி செய்த மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த குறித்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டையதையடுத்தே களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர். இதுகுறித்து பொலிஸ் விசாரணைகளின் மூலம் குறித்த தொழிலதிபர் வணிக நோக்கத்திற்காக இந்தியா சென்றிருந்தபோது மேற்படி பெண் அவரை சந்தித்து நட்பு கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் இந்தியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவைக் கழித்துள்ளனர், அவர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அந்த பெண் கைபேசியில் இரகசியமாக பதிவு செய்துள்ளார். இருவரும் இந்த நாட்டிற்கு வந்த பிறகு அந்த பெண் தொழிலதிபரை தொடர்பு கொண்டு குறித்த வீடியோவை காட்டியுள்ளார். 70 இலட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் வீடியோவை தொழிலதிபரின் மனைவிக்கு…
அத்தனகல்ல ஓயா, களனி கங்கை, களுகங்கை, கின் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையினால் முகத்துவாரங்களின் எல்லைப் பிரதேசங்கள் பாதிக்கப்படலாம். அத்துடன் அதிகரித்த மழை காரணமாக சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு நீர் செல்லும் கால்வாய்களின் நீர் மட்டம் ஒரே தடவையில் அதிகரிக்கலாம். இதனால் இப்பிரதேச மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, அதிக மழைவீழ்ச்சி கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு 150 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் பாடநூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நேற்று (18) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்ட, பாடசாலை இஸ்லாம் கல்விக்கான பாடப் புத்தகங்கள் தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு 2021 மற்றும் 2022 இல் விநியோகிக்கப்பட்டன. ஆனால் இன, மத, குல வாதம் காரணமாக தன்னுடைய மார்க்கத்தைக் கற்பதற்குக் கூட தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு இஸ்லாம் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு மீள பெறப்பட்டுள்ள இப்படி மோசமான நிலை இந்நாட்டில் காணப்பட்டது. நீங்கள் அப்படியான அமைச்சர் அல்ல. இன, மத, குல வாதம் அல்லாத நேர்மையான கல்வி அமைச்சர் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த கல்வி…
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இவ் ஆண்டிற்கான மீலாத் விழா நிகழ்வுகள் நாளை (2022.10.20) வியாழக்கிழமை பாடசாலை நல்ல தம்பி மண்டபத்தில் அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பிரதம அதிதி யாகவும், கல்முனை பிரதி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் றஹிம் கௌரவ அதிதியாகவும், கல்முனை தமிழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து விஷேட அதிதியாகவும் மற்றும் சிறப்பு பேச்சாளராக கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ் – ஷேக் என்.ஜி.அப்துல் கமால் மௌலவி உட்பட பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். (எஸ்.எம்.எம்.றம்ஸான்)