பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் தேரர் ஒருவரும் அடங்குவார்.
அவர்கள் தற்போது வத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள IUSF உறுப்பினரை உடனடியாக விடுவிக்கக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்திற்கு முன் அனுமதி பெறாததால், போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் நோட்டீஸ் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.