அத்தனகல்ல ஓயா, களனி கங்கை, களுகங்கை, கின் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழையினால் முகத்துவாரங்களின் எல்லைப் பிரதேசங்கள் பாதிக்கப்படலாம். அத்துடன் அதிகரித்த மழை காரணமாக சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு நீர் செல்லும் கால்வாய்களின் நீர் மட்டம் ஒரே தடவையில் அதிகரிக்கலாம். இதனால் இப்பிரதேச மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, அதிக மழைவீழ்ச்சி கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்கு 150 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.