Author: admin

நாட்டில் இரண்டு புதிய நுளம்பு இனங்களை சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது. மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் Culex sintellus எனும் நுளம்பு இனம் ஒன்று பதிவாகியுள்ளது. தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இதே நுளம்பு இனங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையிலிருந்து இனங்காணப்பட்ட மற்றைய நுளம்பு இனம் Culex niyainfula என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பரவலாக காணப்படும் இந்த குறிப்பிட்ட வகை நுளம்பு, பெருமூளை மலேரியா எனப்படும் நோயை பரப்புகிறது. இந்த நுளம்பு இனம் இலங்கையில் செயற்படக்கூடிய நோய்க்கிருமியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் நேற்று ஆரம்பகட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான பிரச்சினையை விரைவில் தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (16) காலை சியம்பலாண்டுவ பிரதேச செயலக பிரிவில் ரத்துமட, வீரகந்தவல ஆகிய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பயிர்ச்செய்கைகளை நேரில் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மொனராகலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் குறித்தும் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி…

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற பகுதி உள்ளது. இங்கு நிஸ்தார் என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதாக அந்நாட்டின் பஞ்சாபின் முதல்வருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவம்தன்று விசாரணை மேற்கொள்ள முதல்வரின் ஆலோசகரான தாரிக் ஜமான் குஜார் என்பவர் ஆய்வு மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அப்படி ஒன்றுமில்லை என்று மழுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், மருத்துவமனையின் பிணவறையில் சோதனை மேற்கொள்ள முற்பட்டார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் இவருக்கு பிணவறை உள்ளே செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டிய பிறகே ஆய்வு மேற்கொள்ள வந்தவருக்கு அனுமதி வழங்கினர். பின்னர் அவர் பிணவறைக்கு மேல் இருக்கும் மாடியை சோதனை…

Read More

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மேல் பார ஊர்தி வெடிகுண்டு வெடித்ததால் அதனொரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனின் கார்கிவ் மீது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்த முக்கிய பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதனை யாரும் உரிமை கோராவிடினும், தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய எதிர்ப்பு சக்திகளின் கை மேலோங்கியிருப்பது புலனாகிறது. ரஷ்யாவில் இருந்து கிரிமியாவுக்கான ஒரேநில இணைப்பாக இந்த பாலம் 2018இல் ஜனாதிபதி புட்டினால் திறக்கப்பட்டது. உக்ரேனில், குறிப்பாக தெற்கில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களுக்கு இராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கும், அங்கு துருப்புக்களையும் கொண்டு செல்வதற்கும் முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருந்தது. கிரிமியா பிராந்தியம் வரலாற்றில் அவ்வப்போது பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஆரம்பக்காலத்தில் கிரேக்கர்கள், பல்காரிகள், கிரேக்கர்கள், துருக்கியர், மங்கோலியர் ஆகியோர் கிரிமியாவை ஆரம்பக் காலத்தில் ஆண்டார்கள்.  பின்னர் 15முதல் 18ஆம் நூற்றான்டு வரை ஒஸ்மேனிய பேரரசும், பின்னர் 18 முதல் 20ஆம்…

Read More

கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 15,404 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈட்டை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் திறைசேரியால் மேற்கொள்வதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். களனி கங்கை, கிங் கங்கை, களு கங்கை, நில்வலா கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மாஓயா போன்ற ஆறுகளை அண்டிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 11,157 குடும்பங்களைச் சேர்ந்த 46,797 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 3443 குடும்பங்களில் 11,648 பேரும்…

Read More

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியையோ துடுப்பெடுத்தாட அழைத்து. அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனை அடுத்து 164 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

Read More

அடுத்தாண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான பதில்கள் தெரிவிக்கப்பட்டதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்கும் செயற்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அவற்றுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கத்தை எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது…

Read More

முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் முச்சக்கரவண்டிக்கான பயணக் கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டது. எனினும் பயண கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் அறிவித்திருந்தனர். வாராந்தம் வழங்கப்படும் பெற்றோல் ஒதுக்கம் போதுமானதாக இல்லை என தெரிவித்து அவர்கள் கட்டணத்தை குறைக்க முடியாதென தெரிவித்திருந்தனர்.

Read More