நாட்டில் இரண்டு புதிய நுளம்பு இனங்களை சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது.
மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் Culex sintellus எனும் நுளம்பு இனம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இதே நுளம்பு இனங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையிலிருந்து இனங்காணப்பட்ட மற்றைய நுளம்பு இனம் Culex niyainfula என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் பரவலாக காணப்படும் இந்த குறிப்பிட்ட வகை நுளம்பு, பெருமூளை மலேரியா எனப்படும் நோயை பரப்புகிறது.
இந்த நுளம்பு இனம் இலங்கையில் செயற்படக்கூடிய நோய்க்கிருமியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.