புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை தாமதமடையக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயில் திடீரென கந்தானை கப்புவத்த நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.40 மணியளவில் ரயில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக புத்தளம் மார்க்கத்திலான கொழும்புக்கும் ஹலவகடவுக்கும் இடையில் இயங்கும் ரயில் தாமதமடையக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் தடம் புரண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் பாதையில் மூன்று ரயில்கள் தடம் புரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Author: admin
சுற்றுலா விசா மூலம் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் சென்றவர்களில் சிலர் தொழிலின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக அந்தப் பணியகத்தின பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். எனவே, சுற்றுலா விசா மூலம் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெரிய வெங்காயத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பொதுச் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில், பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேவேளை, பேலியகொட மானிங் சந்தையில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேவேளை, மரக்கறிகளின் விலையும் வழமையை விட அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதுதவிர, நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் கேரட் கிலோ ரூ.420, பீன்ஸ் கிலோ ரூ.520, முட்டைகோஸ் ரூ.360, கத்தரிக்காய் கிலோ ரூ.400, பூசணி கிலோ ரூ.280, பச்சை. மிளகாய் கிலோ ரூ.400 ஆகவும், எலுமிச்சம் பழம் கிலோ ரூ.800 ஆகவும், தக்காளி கிலோ ரூ.440 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேஷிய அரசாங்கம் இலங்கைக்கு 22,350,000 ரூபா மதிப்புள்ள (2,88,610 மலேஷிய ரிங்கிட்) மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சுமங்கலா டயஸிடம், புத்ரா ஜெயாவிலுள்ள சுகாதார அமைச்சில், மலேஷிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனினால் இந்த மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. மலேஷிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நன்கொடை மலேஷியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நெருங்கிய உறவு, நட்பு என்பன, இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புக் காலத்தில் மலேஷிய மக்கள் இலங்கை மக்களுடன் இருப்பதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிராபத்தை விளைவிக்கும் பூஞ்சை தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1,000 ஆம்போடெரிசின் பி இன்ஜெக்ஷன் 50 மி.கி குப்பிகளை உள்ளடக்கிய மருந்துகள், ஹெபரின் இன்ஜெக்ஷன் 25,000 I.U/5 ml இன் 20,000 குப்பிகளும் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.இவை, இரத்தத்தின் உறைதல் திறனைக் குறைக்கவும் மற்றும் இரத்த…
கையடக்க தொலைபேசிகளின் சிம் கார்ட் விற்பனை செய்யும் நபரொருவர், ஆனமடுவ கோண்வலகந்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த 78 வயதான ஆச்சியின் காதுகளில் இருந்த தோடுகளை களவாடிச் செல்வதற்கு முயன்றுள்ளார். எனினும், ஏதோவொரு விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அந்த ஆச்சி, அபாயக்குரல் எழுப்பியுள்ளார். அபாயக்குரலைக் கேட்ட கிராமவாசிகள் அந்த நபரை கையும் மெய்யுமாக பிடித்து ஹபராதுவ பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதானவர் என பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர், இன்றைக்கு பல மாதங்களுக்கு முன்னர் சிம் கார்ட்டுகளை விற்பனை செய்வதற்காக அந்தப் பிரதேசத்துக்கு வந்திருந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சலூன்களில் முடி வெட்டும் போதும் HIV தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, பொது மக்களும் பெருமளவிலானோர் தற்போது அங்கு விரைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன. மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்பு ரயில்…
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதத்தின் பிற்பகுதியிலும் டிசெம்பர் மாதத்திலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு உச்சக்கட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் தற்போது டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 586 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 49,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மருதானை சந்தியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே குறித்த பகுதியில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. எனவே, குறித்த பகுதியில் பயணிக்கவுள்ள வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.