மருதானை சந்தியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே குறித்த பகுதியில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
எனவே, குறித்த பகுதியில் பயணிக்கவுள்ள வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.