Author: admin

2021ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட உரிமை மீறல்கள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு கலாநிதி அஜந்தா பெரேராவினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை. மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை. கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும். காலி – அடிக்கடி மழை பெய்யும். யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை. கண்டி – அடிக்கடி மழை பெய்யும். நுவரெலியா – அடிக்கடி மழை பெய்யும். இரத்தினபுரி – அடிக்கடி மழை பெய்யும். திருகோணமலை -…

Read More

பல மாத ஊகங்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஒகஸ்ட்-செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கிண்ணத்துக்கான பாகிஸ்தானின் கலப்பின மாதிரி முன்மொழிவனை ஆசிய கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் 2023 ஆசியக் கிண்ண போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடப்படும். இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் இலங்கையில் நடைபெறும். “2023 ஆசிய கிண்ணம் எதிர்வரும் ஒகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மொத்தம் 13 பரபரப்பான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும்” என்று ACC வியாழக்கிழமை (15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோ தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனு இன்று (15) பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த தகவலை தெரிவித்தார். இந்த மனு சோபித ராஜகருணா மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சிக்கு காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கி (CBSL) நிலைமையை நிர்வகிப்பதற்கு பாடுபடும் என்றும் உறுதியளித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து செல்கின்றது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ நாணய மாற்று விபர அறிக்கையின் படி டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 311.60 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 328.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இந் நிலையில் அது குறித்து ஊடகவியலாளர்களினால் இன்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறிய சில விடயங்கள்: தேவை மற்றும் விநியோகத்தை பொறுத்தே டொலர் விலை தீர்மானிக்கப்படுகின்றது.…

Read More

பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இராணுவ சிப்பாய் மின்னேரியா இராணுவ முகாமின் மூன்றாவது பொறியியல் சேவை தலைமையகத்தில் பணியாற்றும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. அவரது அச்சுறுத்தலுக்கு ஆளான மாணவியின் முறைப்பாடின் பேரில், பொலிசார் தகவல் வழங்கியதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாயை கைது செய்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் அனுராதபுரம், குருந்தன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெரும் செல்வந்தர்களுக்கு சலுகைகளை வழங்கி நாட்டை வங்குரோத்தடையச் செய்ததாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே வழியில் அவ்வாறே அதை சரியாக அமுல்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் சாதாரண மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு சரியான உதாரணம் மின்கட்டணம் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு வந்த தரப்பை பாதுகாத்து வருவது தற்போதைய ஜனாதிபதியே என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இத்தகைய மோசமான அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எவ்வகையிலும் கைகோர்க்காது எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதியும் ஒன்றிணைவதாக அரசாங்கத்திற்கு சார்பான சில ஊடகங்கள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பதவிகள் சலுகைகளுக்காக இந்நாட்டு மக்களை ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனவும் அவர்…

Read More

மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் 1 கோடியே 80 இலட்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் பீற்றர் போல் நீதிமன்றித்தில் நேற்று (14) உத்தரவிட்டார். இது பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் அமைந்துள்ள சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளரும் அதன் முகாமையாளர் மற்றும் துணை முகவர்கள் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக கூறி பல பேரிடம் சுமார் 1 கோடியே 80 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்த நிலையில் சிலர் குறித்த முகவர் நிலையத்தின் துணை ஏஜன்சி மூலமாவும் முகவர் நிலைய உரிமையாளரிடம் நேரடியாகவும் சிலர் முகாமையாளர் ஊடாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பல…

Read More

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரம் மீளும் என்ற பலமான நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன் உடுகம்பல, ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக சிலர் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படி ஏதும் இல்லை. எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். அந்த பதவிக்கு ஜனாதிபதியை நியமிப்பதற்கு கட்சி என்ற வகையில் நாங்கள் ஆதரவளித்தோம். அவரது அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் பார்த்து அந்த ஆதரவு வழங்கப்பட்டது. மற்றப்படி…

Read More

இரு அணு உலைகளுடனான 300 மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி துறையில் பிரபல நிறுவனமான ரொஸெடம் (Rosatom) உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட போதே இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே இதனைத் தெரிவித்தார். மேலும்,இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது 300 மெகாவாட் ஆற்றல் கொண்ட பாரிய செயற்திட்டம் எனவும் தெரிவித்தார். கடந்த நாட்களில் கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருப்பது எரிசக்தி நெருக்கடியில் இருந்து விடுபட பெரும் ஆறுதலாக உள்ளது என தெரிவித்த தூதுவர், அதன் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவு…

Read More