நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரம் மீளும் என்ற பலமான நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன் உடுகம்பல, ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது :
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக சிலர் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படி ஏதும் இல்லை. எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். அந்த பதவிக்கு ஜனாதிபதியை நியமிப்பதற்கு கட்சி என்ற வகையில் நாங்கள் ஆதரவளித்தோம். அவரது அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் பார்த்து அந்த ஆதரவு வழங்கப்பட்டது. மற்றப்படி வந்து போவதற்காக அல்ல.
நாங்கள் இன்னும் 69 இலட்சம் மக்களுக்காக நிற்கிறோம். தற்போதைய சூழ்நிலையால், அமைச்சு கிடைக்காததால், மூத்த பிரஜைகள் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஓராண்டுக்கு முன்பிருந்த நாட்டு நிலவரத்தையும், இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அன்று நாம் எடுத்த முடிவு சரியானது என உணர்கிறோம். எனவே, இந்தத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டுமே தவிர அவரை காலால் இழுக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன். கட்சி என்ற ரீதியில் அடுத்த தேர்தலில் நாங்கள் எவ்வாறு செயற்படுவது என்று பார்ப்போம். இந்த தருணத்தில் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்.
ஜனாதிபதி மக்கள் தீர்மானங்களை எடுப்பதில்லை. மக்கள் முடிவுகளால் மட்டும் ஒரு நாட்டை ஆள முடியாது. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்கிறார். 2048 இல் பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுவது, நிரந்தரமாக ஆட்சியில் இருக்க அல்ல. அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வழியைத் திறந்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ளாத ஒரு அரசியல் அனாதை கூட்டம் எம்மை அவதூறாகப் பேசுகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. தற்போதைய வேலைத்திட்டத்தின்படி எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் நல்லதொரு இடத்திற்கு கொண்டு வரப்படும் என மக்கள் பலமாக நம்புகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ராஜபக்சக்கள் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். வரலாறு தெரியாத புதிய தலைமுறையினரால் ராஜபக்சவுக்கு எதிரான இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கட்சியை நாங்கள் மிகவும் கடினமாக உருவாக்கினோம். திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் நல்லதொரு முடிவு என கிராமத்தில் உள்ள எமது கட்சியினர் கூறுகின்றனர். கடந்த ஆண்டு சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும், கட்சி தன்னை மறுசீரமைத்து, கிராமம் மற்றும் மாவட்ட அளவில் அமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மக்கள் மத்தியில் செல்ல நாங்கள் அஞ்சமாட்டோம், ஏனென்றால் மக்கள் இன்னும் எம்முடன் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் எந்த தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது. அதனால்தான் மூன்று சதவீத சகோதரர்கள் கணக்கிடப்படவில்லை.
திசைகாட்டியும் ஐ.ம.சக்தியும் இந்த பொருளாதாரத்தை மீண்டும் அழிக்க நினைக்கிறார்கள். திசைகாட்டி இந்த பொருளாதார சீரழிவுக்கு மிகவும் பங்களித்தது. நாட்டின் பொருளாதாரத்தை தின்று தங்கள் கட்சியின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தினார்கள். இன்றும் சுற்றுலாத்துறையை அழித்து நாட்டுக்கு வரும் டொலர்களை அழிக்க முயல்கின்றனர். இலங்கைக்கு அனுப்பும் டொலர்கள் ராஜபக்சக்களின் சட்டைப் பையில் விழும் என்று திசைகாட்டியில் உள்ள பொருளாதார நட்சத்திரங்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் வாய் பிளந்து கண்களை விரித்து பொய்களை கூறுகின்றனர். வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் டொலர்கள் இலங்கையின் வங்கிகளுக்கே செல்கின்றனவே தவிர தனிப்பட்ட பைகளுக்கு அல்ல. இந்த பொய்களை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். மீண்டுமொருமுறை தாடி, முடி வளர்த்த இந்த ஜோக்கருக்கு மக்கள் பிடிபட மாட்டார்கள். இது ஐ.ம.ச மற்றும் திசைகாட்டியின் தோல்வியின் எதிரொலிகளாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழிவுக்குக் காரணமான படித்த, புத்திசாலித்தனமான சான்றோர் இப்போது சஜித் பிரேமதாசவின் பின்னால் ஓடுகிறார்கள். நடைமுறை அரசியல் தெரியாத, சாமானியர்களின் வாசனையில் வாழ முடியாத, அலைந்து திரிபவர்களுடன் பழகுவதுதான் சஜித்தின் அழிவை ஏற்படுத்தும். எனவே, அந்த சான்றோர்களிடம் கவனமாக இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் கூறுகின்றேன்.
சிந்தித்து முடிவுகளை எடுக்கிறார். 2048 இல் பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுவது, நிரந்தரமாக ஆட்சியில் இருக்க அல்ல. அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வழியைத் திறந்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ளாத ஒரு அரசியல் அனாதை கூட்டம் எம்மை அவதூறாகப் பேசுகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் ஐ.எம்.எப் க்கு சென்றாவது இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். தற்போதைய வேலைத்திட்டத்தின்படி எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் நல்லதொரு இடத்திற்கு கொண்டு வரப்படும் என மக்கள் பலமாக நம்புகின்றனர்.