Author: admin

தாமதக் கட்டணங்களுக்காக அரசாங்கம் டொலர்களை வீணடிப்பதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று 45 நாட்களுக்கும் மேலாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது. குறித்த கப்பலுக்கான தாமதக் கட்டணமாக பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. டொலர்களை வீணடிக்க வேண்டாம் எனவும் நம் நாட்டில் டொலர்கள் இல்லாத நிலையில், தாமதக் கட்டணம் செலுத்தி கப்பலை நங்கூரமிடத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த கச்சா எண்ணெய்யின் தரத்தில் பிரச்சினை இருப்பதாவும் இது தொடர்பாக அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மிகப் பெரியளவில் முன்னெடுக்கப்படும் பாலியல் தொழில் சம்பந்தமாக மேலும் 7 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளில் வேலைக்காக சென்று அந்நாடுகளில் அனாதரவாகி, பல்வேறு இன்னல்கள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 50 பெண்கள்,இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்களிடம் வாக்குமூலங்களை பெற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கூறியுள்ளது.

Read More

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். அரசாங்கத்தால் பல மில்லியன் ருபாய்கள் செலவு செய்து பொருளாதார மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை அந்த மாவட்ட மக்களோ அல்லது ஏனைய மக்களோ பயன்படுத்தாது சேதமடைந்து வருகிறது. எமது அமைச்சுக்குட்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் பாவனைக்கு விடுவதற்காக நேரடியாக சென்று அப் பொருளாதார மத்திய நிலையங்களில் என்ன பிரச்சனை என ஆய்வு செய்து வருகின்றேன். இதன்பின் அரச அதிபர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள், வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருடன் கதைத்து விரைவாக திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.ஏனைய மாவட்ட பிரச்சனை வேறு. இங்கு பிரச்சனை வேறு . பொருளாதார மத்திய…

Read More

எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பரிந்துரைகளுக்கு அமைய 17 நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அவற்றுக்கான தலைவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு நேற்று(வியாழக்கிழமை) எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். நீண்டகால முறைமை மாற்றங்களை கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் நாடாளுமன்றத்தில் தாமதம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் இதற்கு பதில் வழங்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின் பின்னர் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் மக்கள் விரும்பிய மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ‘நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் எதற்கு?ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். “ரணில் – ராஜபக்ச அரசுக்கு எதிரான எமது போராட்டம் – பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும். குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பது எமது நோக்கம் அல்ல. அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவே கோருகின்றோம். அடக்குமுறைகள் தொடர்ந்தால் கோட்டாபய ராஜபக்ச போல் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்கு ஓட வேண்டி வரும். நாட்டு மக்கள் விரும்பிய மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை. முன்னர் ராஜபக்ச அரசு ஆட்சியில் இருந்தது. தற்போது ரணில் – ராஜபக்ச அரசு ஆட்சியில் இருக்கின்றது. இதுவா மாற்றம்? இந்த மாற்றத்தையா மக்கள் விரும்பினார்கள்? மக்கள்…

Read More

“நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் போராட்டங்கள் எதற்கு”என்று எதிரணியிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராக எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதனால் அவர்கள் இப்போது போராட்டங்களை விரும்பவில்லை. எதிரணி அரசியல்வாதிகளும், அவர்களின் சகாக்களும் தான் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். எதிரணியினர் தங்கள் சுயலாப அரசியலுக்காகவே போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் போராட்டங்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவசியமற்ற இந்தப் போராட்டங்களை நிறுத்தி விட்டு, நாட்டை மீளக்கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என்று எதிரணிக்கு நான் மீண்டும் அழைப்பு விடுகின்றேன்”என தெரிவித்துள்ளார்.

Read More

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட “உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைதிட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இதுவரை நிறைவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா அவர்களிடம் குறித்த நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் பழைய மாணவ, மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. நிகழ்வின் விசேட அம்சமாக உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைதிட்டத்தில் குறித்த பாடசாலைக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் காத்திரமாக செயலாற்றியமைக்காக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.அஜ்வத் மற்றும் சமுக சேவகர் எம்.எம்.நிப்றாஸ் மன்சூர் ஆகியோரின் சமூக சேவையைப் பாராட்டுமுகமாக அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா முன்னிலையில் பாடசாலை சமூகத்தால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Read More

திலினி பிரியமாலி பண மோசடி தொடர்பில் பிரபல பெண் தொழிலதிபர் ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

Read More

களனி பல்கலைக்கழக விடுதி ஒன்றில் மாணவர்கள் குழுவொன்று தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று கன்னங்கர விடுதியில் மாணவர்களை தடுத்து வைத்து பல மணிநேரம் தாக்கியதாக கூறப்படுகிறது. சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டதாக கூறி 05 மாணவர்கள் நேற்று 2ஆம் திகதி இரவு ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். கலைப் பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் 05 மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 02ஆம் திகதி காலை முதல் சிரேஷ்ட மாணவர்களால் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். பின்னர் வேன் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு மாலபே பிரதேசத்தில் உள்ள மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு அவர்களை நவகமுவ பொலிஸாருக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள், பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். தாக்குதலுக்கு…

Read More