(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட “உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைதிட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இதுவரை நிறைவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது
பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா அவர்களிடம் குறித்த நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் பழைய மாணவ, மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வின் விசேட அம்சமாக உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைதிட்டத்தில் குறித்த பாடசாலைக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் காத்திரமாக செயலாற்றியமைக்காக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.அஜ்வத் மற்றும் சமுக சேவகர் எம்.எம்.நிப்றாஸ் மன்சூர் ஆகியோரின் சமூக சேவையைப் பாராட்டுமுகமாக அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா முன்னிலையில் பாடசாலை சமூகத்தால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.