களனி பல்கலைக்கழக விடுதி ஒன்றில் மாணவர்கள் குழுவொன்று தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று கன்னங்கர விடுதியில் மாணவர்களை தடுத்து வைத்து பல மணிநேரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டதாக கூறி 05 மாணவர்கள் நேற்று 2ஆம் திகதி இரவு ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
கலைப் பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் 05 மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 02ஆம் திகதி காலை முதல் சிரேஷ்ட மாணவர்களால் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வேன் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு மாலபே பிரதேசத்தில் உள்ள மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அங்கு அவர்களை நவகமுவ பொலிஸாருக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள், பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவரை கிரிபத்கொட பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியது ஏன் என கேள்வி எழுப்பியே, சிரேஷ்ட மாணவர்கள் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் அனைவரும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அரநாயக்க, கலவான, பரகடுவ, வத்தேகம மற்றும் கஹவத்த பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.