மிகப் பெரியளவில் முன்னெடுக்கப்படும் பாலியல் தொழில் சம்பந்தமாக மேலும் 7 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளில் வேலைக்காக சென்று அந்நாடுகளில் அனாதரவாகி, பல்வேறு இன்னல்கள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 50 பெண்கள்,இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பெண்களிடம் வாக்குமூலங்களை பெற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கூறியுள்ளது.