இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் நேற்று நிதியமைச்சில் இலங்கை அதிகாரிகளுடன் குறுகிய கால செயல்திறன் மற்றும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறுவது தொடர்பாக எதிர்காலத்தில் அடைய வேண்டிய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடலை ஆரம்பித்தனர். பிரதிநிதிகள் மே 23 வரை நாட்டில் தங்கியிருந்து, IMF ஒப்பந்தங்களின் எதிர்கால செயல்திறன் மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிப்பார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பில் தங்கியிருக்கும் போது நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். “இதுவரை நாங்கள் செய்த முன்னேற்றம் மற்றும் குறிப்பாக இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் மதிப்பாய்வுக்கான எங்கள் தயாரிப்பு பற்றி அவர்கள் விவாதிப்பார்கள். செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலாவது மீளாய்வு கூட்டத்திற்கு முன்னதாக வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்” என்று அவர் கூறினார். IMF…
Author: admin
கொஸ்லந்த, தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த தம்பதியரை இன்று (12) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தறை கெகுனதொர பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஜி தருஷி என்ற யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நிலையில், வாரியபொல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கே.ஏ.தனுஷ்க என்பவரே காயமடைந்துள்ளார். இவர்கள் கொஸ்லந்தவில் உள்ள தியலும பகுதிக்கு சுற்றுலா சென்று இரவு முகாமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யுவதியை தாக்கிய காட்டு யானை அதே இடத்தில் சுற்றித் திரிந்ததாகவும், குழுவுடன் வந்த அனைவரையும் விரட்டியடித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் மிகுந்த முயற்சியுடன் யானையை விரட்டினர். கொஸ்லந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
07.05.2023 அன்று காலை 08:15 மணியளவில் கெலிஓயவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற சகோதரி முனவ்வரா ஜின்னா அவர்களை கடந்த 6 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் , போலீசார் தேடி வந்த நிலையில் அவர் காட்டுக்குள் கொலை செய்ய்யபட்டு புதைக்கபட்ட நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சகோதரி பழைய எல்பிட்டியை சேர்ந்தவர். (பழைய எல்பிட்டி – வெலிகல்ல, கண்டி மாவட்டம்) இந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார். பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்று அவரின் சகோதரர் தெரிவித்துள்ள நிலையில் அவர் எல்பிட்டியவில் வைத்து காட்டுக்குள் இழுத்து செல்லப்ட்ட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் பொலிசில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும் ஆறு பாடங்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது, மற்ற பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 10 மையங்களில் இந்நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உயர்தர மதிப்பீடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை அதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டின் போது நடைமுறைப் பரீட்சைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இருந்து கோதுமை மாவை ஏற்றிச் சென்ற புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கிழக்குப் புகையிரத சேவைகள் சற்று தாமதமடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலை தடுக்கும் வகையில் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் அமைச்சரவை குழு உறுப்பினர்கள் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை இம்மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது. இலங்கை வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன, ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பங்குதாரர்கள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வரி விதிப்புகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்கு பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எதிர்காலத்தில் வரிவிகிதங்களை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையொன்று நேற்று சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஒருகுடவத்தை சுங்க முனையத்திற்கு விஜயம் செய்த போதே இதனைத் தெரிவித்தார். மொத்தம் 556,000 சிகரெட்டுகள் ஒரு இயந்திரம் போல போலியான ஒரு பேக்கில் அடைக்கப்பட்டிருந்தன. இதன் பெறுமதி சுமார் 85 மில்லியன் ரூபாவாகும் மற்றும் விதிக்கப்பட்டுள்ள வரித் தொகை சுமார் 70 மில்லியன் ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 4 ஜீப்…
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு புதன்கிழமை (10) அன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கானது இன்று (12) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு மசோதாவினை TISL நிறுவனம் வரவேற்கும் அதேவேளை, இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தி இவை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அதனூடாக இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. TISL நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவின் பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட 37 சரத்துகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள்/விதிகள் முறைகேடுகளை வெளிப்படுத்தும் நபர்கள் (whistleblowing), தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம்…
நாட்டில் நெற்செய்கையை ஊக்குவிப்பதற்காக விரைவில் விவசாயிகளுக்கு உரக் கொள்வனவுக்கான கூப்பன் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 40,000 ரூபா வரை உரக்கொள்வனவுக்கான நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலைமையைக் தவிர்ப்பதற்காக நெற் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 40 000 ரூபாவாகக் காணப்பட்ட யூரியா உரத்தின் விலை 10 000 ரூபாவாகக் குறைத்துள்ளோம். எதிர்வரும் தினங்களில் உரக்கப்பல்கள் வருகை தந்ததன் பின்னர் இவ்விலைகள் மேலும் குறைவடையும். உர விநியோகத்தில் போட்டித்தன்மை ஏற்பட்டால் அவற்றின் விலைகள் இயல்பாகவே குறைவடையும். ஒரு ஹெக்டயரில் நெற் செய்கையில் ஈடுபடுவோருக்கு 20,000 ரூபாவும், இரு ஹெக்டயரில் நெற் செய்கையில் ஈடுபடுவோருக்கு 40,000 ரூபாவும்…
பொதுமக்களை எழுந்தமானத்திற்கு கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வராதீர்கள். ஒருவரை கைது செய்து வழக்கு தொடர்வதெனில் சரியான ஆதாரங்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் என தொல்லியல் திணைக்களத்துக்கு வவுனியா நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை சேதப்படுத்தி அடித்தளம் அமைத்தது, நீதிமன்ற உத்தரவுப்படி சேதமடைந்த சிலைகளை வைக்காமல் புதிய சிலை களை வைத்த குற்றச்சாட்டில் நெடுங்கேணி காவல்துறையினரால், ஆலய பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர்கள் நேற்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வவுனியா நீதிமன்ற நீதிபதி, தொல்லியல் திணைக்களத்தினரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். யாரையும் சும்மா சும்மா கைது செய்து கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்தாதீர்கள், ஒருவரை கைது செய்து வழக்கு தொடர்வதெனின் உரிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் என கடிந்து கொணடத்துடன் கைதான நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார்.