ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். நாடாளுமன்றில் ஆற்றிவரும் அக்கிராசன உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம்…
Author: admin
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஓகஸ்ட் 3 புதன்கிழமை, அரசாங்கத்தின் கொள்கைகளை வழங்குகையில், இந்த ஆண்டு இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்று கூறினார். அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நீண்ட கால பொருளாதார கொள்கைகளின் ஊடாக 2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஓகஸ்ட் 1 திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. அது நிறைவேற்றப்பட்டவுடன், அது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்று அழைக்கப்படும். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக பலத்தினை வழங்கும் வகையில் குறித்த அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சைட் அல் நயான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களைக் கடந்து நிலையான மற்றும் அமைதியான சூழலை அடைவதற்கு உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு ஜனாதிபதிகளும் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவை அகற்றி, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹற்றன் – கொழும்பு மற்றும் ஹற்றன் – கண்டி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து, கினிகத்ஹேன பகதுலுவ பகுதியிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்ரெதட்ரன் பகுதியிலும் இன்று (3) அதிகாலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தல்
நேற்றைய தினம்(02) டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த டீசல் தொகையை தறையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதேபோல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதலாவது கப்பல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 12 மற்றும் 14 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடையவுள்ளது. மேலும், ஒரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைபேயில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பேசுகையில், தாய்வானை அமெரிக்கா கைவிடாது என்பதை ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்த விரும்புவதாக கூறினார். “இன்று, எங்கள் பிரதிநிதிகள் … தாய்வானுக்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் கைவிட மாட்டோம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக தாய்வானுக்கு வந்துள்ளோம், மேலும் எங்கள் நீடித்த நட்பைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று பெலோசி மேலும் கூறினார். பெலோசி தாய்வானுக்கு வந்த சில நிமிடங்களில், தாய்வான் ஜலசந்தியில் நீண்ட தூர நேரடி வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது உட்பட, “தீவைச் சுற்றி தொடர்ச்சியான கூட்டு இராணுவ நடவடிக்கைகளை” உடனடியாகத் தொடங்குவதாக சீனா கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது கையடக்கத் தொலைபேசி தினமும் முழு நேரமும் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் கூறுகிறார். ‘அத தெரண’வுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய அவர், தனது கையடக்கத் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றார். “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதுவரையான சீர்திருத்தங்கள், நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளை சிரேஷ்ட ஆலோசகர் பதவிகளுக்கு நியமிப்பது போல் தெரிகிறது” என்றும் அவர் கூறினார். உறுதியளித்தபடி ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பதிலாக ஜனாதிபதி இவ்வாறான சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக தனது டுவிட்டர் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார். “தனக்கு வாக்களித்த எம்.பி.க்களுக்கு ஆறுதல் கூறுவதும், நிராகரிக்கப்பட்ட கட்சிக் கூட்டாளிகளுக்கு வெகுமதி அளிப்பதும் அதே பழைய கேவலமான முறையின் தொடர்ச்சியாகும்” என்று அவர் மேலும் கூறினார். இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நியமிப்பதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். நாட்டில்…
2021 ம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஓகஸ்ட் 15 ம் திகதி முதல் 30 ம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.