அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஓகஸ்ட் 1 திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. அது நிறைவேற்றப்பட்டவுடன், அது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்று அழைக்கப்படும்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக பலத்தினை வழங்கும் வகையில் குறித்த அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.