அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைபேயில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பேசுகையில், தாய்வானை அமெரிக்கா கைவிடாது என்பதை ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்த விரும்புவதாக கூறினார்.
“இன்று, எங்கள் பிரதிநிதிகள் … தாய்வானுக்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் கைவிட மாட்டோம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக தாய்வானுக்கு வந்துள்ளோம், மேலும் எங்கள் நீடித்த நட்பைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று பெலோசி மேலும் கூறினார்.
பெலோசி தாய்வானுக்கு வந்த சில நிமிடங்களில், தாய்வான் ஜலசந்தியில் நீண்ட தூர நேரடி வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது உட்பட, “தீவைச் சுற்றி தொடர்ச்சியான கூட்டு இராணுவ நடவடிக்கைகளை” உடனடியாகத் தொடங்குவதாக சீனா கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.