வங்கி கடனுக்கான வட்டி அதிகரிப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு குழுக்களுக்கு கடந்த வருடம் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல், கடன்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இறுதியாக அதன் ஆறாவது குழுவின் பிரச்சினைகள் தொடர்பில், நாம் அமைச்சரவையில் பேச்சு நடத்தி முடிவொன்றை மேற்கொண்டு தீர்வை பெற்றுக்கொண்டோம். எனினும் ஏழாவது குழுவின் பிரச்சினைக்கான காரணம், நூற்றுக்கு 9 வீதமாக இருந்த வட்டி வீதம் 20 வீதமாக அதிகரித்தமையாகும். அந்தளவு வட்டி வீதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதே அவர்களது பிரச்சினை ஆகும். அத்தோடு, இவ்விடயம் தொடர்பில் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், அதற்கிணங்க…
Author: admin
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (07) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். மாலைத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் தொடர்பாக குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு நேற்றும் நேற்று முன்தினமும் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்த அமர்வில் மாலைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தி மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீட் கலந்து கொண்டார்.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் பொலிஸ் கான்ஸ்டபிளும் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பணத்தை பெற்றுக் கொண்டு கான்ஸ்டபிளை ஏமாற்றியதாக வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதிரணசிங்க பிரேமதாச செய்தது எல்லாமே சரி என்று தான் வாதிடவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் அல்ல நான். என் தந்தையார் ரணசிங்க பிரேமதாச செய்த நல்ல விடயங்கள் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வேன். அதேநேரம் குறைபாடுகள் இருந்தால் அதனை நிராகரித்துவிடுவேன். நான் ஒரு சுதந்திரமான நபர். எனக்கு சுயாதீன புத்தியும் சுதந்திர எண்ணமும் உள்ளது.எனக்கென்று ஒரு இதயமும் மனசாட்சியும் இருக்கிறது. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது எனது மறைந்த தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் செய்த நல்லதொரு செயலாகும். தொழிற்சங்கத் தலைவர்களுக்கு என் தந்தை தீங்கு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் அவ்வழியே செல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?ஆனால் நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றும் சஜித் பிரேமதாச…
மலையகத்தின் சில பிரதேசங்களில் மாண்டரின் ஆரஞ்சு பயர்ச்செய்கை தொடர்பான ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மாண்டரின் ஆரஞ்சு (Mandarin orange) இறக்குமதிக்காக வருடாந்தம் பாரியளவிலான டொலர் செலவிடப்படுகின்றது. இந்நிலையில் அதனை உள்நாட்டில் பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் மாண்டரின் ஆரஞ்சு பயிர்ச்செய்கைக்கு உகந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மேஜர் (ஓய்வுபெற்ற) சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கடந்த 2019ம்ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றில் ஒருசில மாஜிஸ்திரேட் நீதவான்களின் செயற்பாடு குறித்து கருத்து வௌியிட்டமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் குற்றவாளியாக காணப்பட்ட அஜித் பிரசன்ன, தற்போதைக்கு நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார். அஜித் பிரசன்ன தற்போது அனுபவித்துவரும் 4 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர், இந்தத் தண்டனை அமுல்படுத்தப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10, 2023 முதல் அந்தப் பதவியிவிருந்து தான் இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செப்டெம்பர் 18, 2019 இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவை நியமித்தார். இந்நிலையில் சப்ரகமுவ மாகாண ஆளுனராக பெரும்பாலும் நவீன் திசாநாயக்க அல்லது ரங்கே பண்டார நியமிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் இன்னும் சில மாகாணங்களின் ஆளுனர்களும் விரைவில் ராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அடுத்த பாடசாலை கல்வித் தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஜூன் 12 ஆம் திகதிக்கு பின்னர் அது தொடர்பில் அறிவிக்கலாம் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். இதேவேளை கடந்த மாதம் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் பொதுப் பரீட்சை ஆரம்பமாகியது. கோவிட் தொற்று காரணமாக இலங்கையில் பிரதான பரீட்சைகளை நடாத்துவதற்கான கால எல்லைகள் பல்வேறு திருத்தங்களுக்கு உட்பட்டு கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த பரீட்சை சுமார் 05 மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமானது. இதேவேளை, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான 03ஆம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் இன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் படை நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு தலைமையகத்திற்கு முன்பாக நாளையதினம் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளைய தினம் பல வீதிகளில் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜித ஹேரத், கே.டி.லால்காந்த, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்ட 26 பேருக்கு இந்த தடை உத்தரவு பொருந்தும். கோட்டை வீதி, நாவல வீதி, சரண வீதி, தேர்தல் காரியாலய வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை வீதி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதையும் வீதிகளை மறிப்பதையும் தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்கள் காரணமாக சாதாரணதர பரீட்சை நடைபெறும் பாடசாலைகளை முற்றுகையிடுவதுடன் பொதுமக்களின் நாளாந்த வாழ்வும் பாதிக்கப்படும் என வெலிக்கடை காவல்துறையினர் நீதிமன்றில்…