நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மேஜர் (ஓய்வுபெற்ற) சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
கடந்த 2019ம்ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றில் ஒருசில மாஜிஸ்திரேட் நீதவான்களின் செயற்பாடு குறித்து கருத்து வௌியிட்டமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் குற்றவாளியாக காணப்பட்ட அஜித் பிரசன்ன, தற்போதைக்கு நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார்.
அஜித் பிரசன்ன தற்போது அனுபவித்துவரும் 4 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர், இந்தத் தண்டனை அமுல்படுத்தப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.