அடுத்த பாடசாலை கல்வித் தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஜூன் 12 ஆம் திகதிக்கு பின்னர் அது தொடர்பில் அறிவிக்கலாம் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த மாதம் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் பொதுப் பரீட்சை ஆரம்பமாகியது.
கோவிட் தொற்று காரணமாக இலங்கையில் பிரதான பரீட்சைகளை நடாத்துவதற்கான கால எல்லைகள் பல்வேறு திருத்தங்களுக்கு உட்பட்டு கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த பரீட்சை சுமார் 05 மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமானது.
இதேவேளை, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான 03ஆம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.