மலையகத்தின் சில பிரதேசங்களில் மாண்டரின் ஆரஞ்சு பயர்ச்செய்கை தொடர்பான ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது
இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மாண்டரின் ஆரஞ்சு (Mandarin orange) இறக்குமதிக்காக வருடாந்தம் பாரியளவிலான டொலர் செலவிடப்படுகின்றது.
இந்நிலையில் அதனை உள்நாட்டில் பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் மாண்டரின் ஆரஞ்சு பயிர்ச்செய்கைக்கு உகந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.