Author: admin

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு, மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் ஆகிய நோய்களும் தற்போது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. எனவே, 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கிடையில், மழைக்காலத்தில் எலிக்காய்ச்சலால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, இரண்டு பருவமழைகளைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் உச்சத்தை அடைவதால், பருவகால மாறுபாட்டால் நோய் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. இந்த…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (04.05.2023) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும், ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், மின்னல் தாக்கங்களும் இருக்கக் கூடும் என…

Read More

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இவ்வருடம் (2023) G.C.E O/L பரீட்சை எழுதும் மாணவர்களின் நன்மை கருதி பல வேலைத்திட்டங்களை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது அதில் ஒரு கட்டமாக மேற்படி மாணவர்கள் இரவு வேளைகளில் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு சுய கற்றலில் ஈடுபடும் காட்சியே இது (புகைப்படம் எடுக்கபடும் போது நேரம் நேரம் பி.ப 9.20 ) இவ்வாறு பல செயற்பாடுகளை மாணவச்சமூகத்திற்காக செய்யும் பல நல்ல அதிபர்களில் இப்பாடசாலை அதிபரும் ஒருவர் இவரது தூரநோக்கான செயற்பாடுகளினால் அண்மையில் வெளியான G.C.E(O/L) பரீட்சையில் இப்பாடசாலை மாணவர்கள் நல்ல பெறுபேறுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயம் இங்கு. கெட்டிக்கார மாணவர்களை தெரிந்தெடுத்து கற்பிக்க பாடசாலைகளுக்குகிடையில் கற்க ஆர்வத்துடன் கற்றளில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கற்க வழிசமைத்துக்கொடுத்துள்ள அதிபரதும் இப் பாடசாலை சமூகத்தினதும் இந்த முன்மாதிரியான செயல் நாம் அனைவராலும் கவனிக்கப்பட்டு பாராட்டபட வேண்டிய விடயமே. மேலும் இம் மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் சாதாரணதர பரீட்சையில் சிறந்த…

Read More

இந்தியாவின் பிரபல நடிகர் சரத் பாபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆரம்பத்தில் சரத்பாபுவின் உடல்நிலை சீராக இருந்தபோதிலும், பிற உடல்நலக் கோளாறுகளால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. சரத் ​​பாபுவின் இயற்பெயர் செரு சத்யம் பாபு தீட்சிதுலு என்பதாகும். தெலுங்கு திரையுலகில் தனித்துவமான நடிகராக பெயர் பெற்ற சரத் பாபு, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் தனது முத்திரையை பதித்தவர். 1973-ம் ஆண்டு ‘ராம ராஜ்யம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சரத்பாபு, இதுவரை 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 1981, 1988, 1989 ஆகிய ஆண்டுகளில் சிறந்த…

Read More

பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, கொலை செய்யப்படுகின்றமை மற்றும் கைவிடப்படுகின்றமை ஆகிய சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 60 சிறுவர்கள் கைவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்போதைய சட்டத்திற்கு அமைய குழந்தைகளை கைவிட்டுச் செல்லும் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. புதிய திருத்தத்திற்கு அமைய குழந்தைகளை நிலையங்களில் ஒப்படைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்காக தண்டனை சட்டக்கோவையில்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (03) புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை ஜூன் 9-ம் திகதி பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதன் மூலம் சர்வஜன வாக்குரிமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Read More

2023 ஆம் ஆண்டுக்கான சிறு போகத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. உரம் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை தீர்மானித்தவாறு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உரம் கொள்வனவு செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாவும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாவும் மானியமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த சிறு போகத்தில் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. *ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் வழங்க மாகாண மட்டத்தில் நிலையங்கள்!* பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை…

Read More

நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் தலைவராக சுமித் அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துவான் நலின் ஒசென் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் வரிச்சுமை 115 % வீதமாக அதிகரிக்கும் என பேராதனை பல்கலைகழக பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டார். மேலும் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் வரிச்சுமை 115 % வீதமாக அதிகரிக்கும் எனவும் தனிநபர் கடன் சுமை 13 லட்சத்தில் இருந்து 19 லட்சமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு 69546 ரூபாய் ஆக இருந்த தனிநபர் கடன் 2023 ஆன் ஆண்டு 136,942 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில், 2028 ம் ஆண்டு 193,0796 ரூபாவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமார் 19 லட்சம் கடனுடன் பிறக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

இரண்டு கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை பொத்துவில் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் ஹலாம் வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இச்சோதனை நடவடிக்கையின் போது கல்முனை விசேட அதிரடிப்படைக்கு உதவியாக அறுகம்பை முகாம் விசேட அதிரடிப்படையினரும் களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நடவடிக்கையின் போது 2 கஜமுத்துகளை கடத்திவந்த 60 ,37 வயதுடைய இரு சந்தேக நபர்களை மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படை அணி கைது செய்ததுடன் கஜமுத்துக்கள் மற்றும் இதர சான்று பொருட்களை பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More