கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இவ்வருடம் (2023) G.C.E O/L பரீட்சை எழுதும் மாணவர்களின் நன்மை கருதி பல வேலைத்திட்டங்களை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது
அதில் ஒரு கட்டமாக மேற்படி மாணவர்கள் இரவு வேளைகளில் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு சுய கற்றலில் ஈடுபடும் காட்சியே இது (புகைப்படம் எடுக்கபடும் போது நேரம் நேரம் பி.ப 9.20 )
இவ்வாறு பல செயற்பாடுகளை மாணவச்சமூகத்திற்காக செய்யும் பல நல்ல அதிபர்களில் இப்பாடசாலை அதிபரும் ஒருவர் இவரது தூரநோக்கான செயற்பாடுகளினால் அண்மையில் வெளியான G.C.E(O/L) பரீட்சையில் இப்பாடசாலை மாணவர்கள் நல்ல பெறுபேறுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயம் இங்கு.
கெட்டிக்கார மாணவர்களை தெரிந்தெடுத்து கற்பிக்க பாடசாலைகளுக்குகிடையில் கற்க ஆர்வத்துடன் கற்றளில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கற்க வழிசமைத்துக்கொடுத்துள்ள அதிபரதும் இப் பாடசாலை சமூகத்தினதும் இந்த முன்மாதிரியான செயல் நாம் அனைவராலும் கவனிக்கப்பட்டு பாராட்டபட வேண்டிய விடயமே.
மேலும் இம் மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெருப்பேற்றை பெற்றோருக்கும் பாடசாலை சமூகத்துக்கும் பெருமை சேர்த்து வாழ்க்கையில் முன்னேற நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.