அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் வரிச்சுமை 115 % வீதமாக அதிகரிக்கும் என பேராதனை பல்கலைகழக பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டார்.
மேலும் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் வரிச்சுமை 115 % வீதமாக அதிகரிக்கும் எனவும் தனிநபர் கடன் சுமை 13 லட்சத்தில் இருந்து 19 லட்சமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு 69546 ரூபாய் ஆக இருந்த தனிநபர் கடன் 2023 ஆன் ஆண்டு 136,942 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில்,
2028 ம் ஆண்டு 193,0796 ரூபாவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமார் 19 லட்சம் கடனுடன் பிறக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.