Author: admin

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனடிப்படையில் கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் சில பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மாகாண சபைத் தேர்தல் சட்டத் திருத்தச் சட்டமூலத்தை நாளை (25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார். இந்த மசோதா தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவாக முன்வைக்கப்படுகிறது. ஒக்டோபர் 11, 2019 அன்று, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினரின் முன்மொழிவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

Read More

அஸ்வசுமா நலத்திட்ட உதவித் திட்டம் 01 ஜூலை 2023 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெளியிடப்பட்டது. அதன்படி, நலத்திட்ட உதவித் திட்டத்திற்கு 4 சமூகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பிரிவுகள் இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, ஏழை மற்றும் மிகவும் ஏழ்மை என பெயரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இடைநிலைப் பிரிவில் உள்ள குடும்ப அலகுக்கு, 31 டிசம்பர் 2023 வரை மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகையும் பாதிக்கப்படக்கூடிய என அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அலகுக்கு 2025 மார்ச் வரை மாதாந்தம் ரூ. 5,000 உம் வழங்கப்படும். மேலும் ஜூலை 1, 2023 முதல் 3 ஆண்டுகளுக்கு, ஏழைப் பிரிவின் கீழ் உள்ள ஒரு குடும்ப அலகுக்கு ரூ. 8,500 மற்றும் மிகவும் ஏழ்மையான பிரிவின் கீழ் வரும் குடும்ப…

Read More

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்வதையும், சட்டமா அதிபராக அவரது செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதையும் தடுத்து, பயங்கரவாத தடுப்பு பணியகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிய கடிதத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் டயானா கமகேவைக் கைது செய்ய முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டியது. எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் டயனா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றில் கோரியிருந்தனர். இது குறித்து இன்று தனது முடிவை அறிவித்த நீதிவான், இராஜாங்க அமைச்சரை உரிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே இது தொடர்பில் தாம்…

Read More

அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எப்பாவில் வசிக்கும் இருவரே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்துள்ளதாகவும் மற்றவர் தனது வயலில் புல் அறுத்தபோது வெப்பம் தாங்காமல் இறந்தார் என எப்பாவல மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். எப்பாவல கீழ் தியம்பலேவயில் வசித்த அதுல தம்மிக்க (34) மற்றும் எப்பாவல கட்டியவ பகுதியில் உள்ள எல்.ஜி. விஜேசிங்க (38) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இந்த இரு மரணங்கள் தொடர்பாகவும், எப்பாவெல அரசு மருத்துவமனை டாக்டர் என்.எச். திஸாநாயக்கவின் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அதிர்ச்சி மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக இருவரும் உயிரிழந்ததாக மரண விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

Read More

தான் தனிப்பட்ட முறையில் ரணிலுக்கு உதவுவதாக என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவங்களின் போது தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர்களது வீடுகள் அமைக்கப்படுவது குறித்து அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். “தீப்பிடித்தபோது, ​​பொலிசார் நின்றுகொண்டு குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தினர். மேலே இருந்து உத்தரவு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து கமிஷன் நியமிக்க வேண்டும். புலனாய்வு அமைப்புகளுக்கு மே 9ம் திகதிக்கு முன் தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் ஜேவிபி இருந்தது, ஹெல்மெட் கும்பல் இருந்தது என்று கூறுவதற்கு நான் பொறுப்பு.. அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டனர். விமல் புத்தகத்தை படித்துவிட்டு பதில் சொல்லலாம்..பேராசிரியருக்குப் பதிலாக, ஒரு துறவியைக் கொண்டுவந்து,…

Read More

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் எழுநூறு தாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் ஐந்நூற்று ஐம்பது தாதியர்கள் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் விடுமுறை எடுத்து ஐந்து வருட காலத்திற்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர். அத்துடன், தற்போதைய தரவு அறிக்கைகளின்படி சுமார் நூற்றைம்பது தாதியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதேவேளை, தாதியர் சேவையில் தற்போது சுமார் இரண்டாயிரத்து நானூறு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (தாதியர் கட்டுப்பாடு) சாமிக்க கமகே தெரிவித்துள்ளார்.

Read More

தொழில் நிமித்தமாக குவைட் நாட்டுக்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த 52 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இவ்வாறு நாட்டுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும், அவர்கள் இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 230 விமானத்தில் வந்தடைந்தனர். இக் குழுவில் 17 ஆண்களும் 35 பெண்களும் இருந்ததாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Read More