தொழில் நிமித்தமாக குவைட் நாட்டுக்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த 52 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.
குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இவ்வாறு நாட்டுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும், அவர்கள் இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 230 விமானத்தில் வந்தடைந்தனர்.
இக் குழுவில் 17 ஆண்களும் 35 பெண்களும் இருந்ததாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.