அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எப்பாவில் வசிக்கும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்துள்ளதாகவும் மற்றவர் தனது வயலில் புல் அறுத்தபோது வெப்பம் தாங்காமல் இறந்தார் என எப்பாவல மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
எப்பாவல கீழ் தியம்பலேவயில் வசித்த அதுல தம்மிக்க (34) மற்றும் எப்பாவல கட்டியவ பகுதியில் உள்ள எல்.ஜி. விஜேசிங்க (38) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு மரணங்கள் தொடர்பாகவும், எப்பாவெல அரசு மருத்துவமனை டாக்டர் என்.எச். திஸாநாயக்கவின் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அதிர்ச்சி மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக இருவரும் உயிரிழந்ததாக மரண விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.