நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில், 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை 3 இலட்சமாக அதிகரிக்கலாம் என அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசேட தகமைகள் எதனையும் கொள்ளாதவர்கள் என்றும் இதில் 60 சதவீதமானவர்கள் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார். புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடைசெய்யும் கோரிக்கையை பிரதேச மக்கள் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து புளியாவத்தை பகுதிக்கு சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான் நோர்வூட் பிரதேச சபை விடுத்துள்ள மாட்டிறைச்சி கடைக்கான டெண்டர் அறிவித்தலை நிறுத்தி டெண்டருக்காக பெறப்பட்ட 15லட்சம் ரூபாவை உரியவரிடம் கையளிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ABC தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிக்கொள்ளும் கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியொன்றின், இறுதிச் சுற்றில் போட்டியாளர்களிடம் இவ்வாறு கோட்டாபய குறித்து கேள்வி எழுப்ப்பட்டது. “2022ம் ஆண்டு மக்கள் போராட்டத்தினால், நாடொன்றின் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்திய பெருங்கடலின் மாலைத்தீவை நோக்கி அவர் பயணித்துள்ளார். இந்த ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர்” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு, இரண்டு போட்டியாளர்கள் ”இலங்கை” என பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 25 வருட வெள்ளி விழாவும் உலக மீனவ திண விழாவும் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க ஏற்பாட்டாளர் ஹேமன் குமார் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் உலக மீனவ மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய பிராந்திய பிரதிநிதியான இந்திய மீனவ மக்கள் பேரவையைச் சேர்ந்த திருமதி ஜேசிரத்னம் கிரிஸ்டி, ஜோன் ஸ்டாடகஸ் கலந்துகொண்டனர். கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உட்பட பல மாவட்டங்களிலிருந்தும் மீனவ பிரதிநிதிகள் பங்குபற்றினர். ஆர்பாட்டக்காரர்கள் நீல நியாயத்துவத்தின் ஊடாக சிறு மீனவன் மற்றும் உணவு தன்னாதிக்கத்தை வலுப்படுத்துவோம் எனும் கருப்பொருளில் நடந்த இந்நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன் மீனவர் பிரதிநிதிகள் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சுலோகங்களை கோஷித்த வன்னம் பேரணியாக கூட்டமண்டபத்தை வந்தடைந்தனர். நீல பொருளாதார தேவி ஏற்கும் சிறு மீனவனுக்கு இடமில்லை., அடக்கு முறையை பயன்படுத்துவதால்…
அடுத்த மாதம் முதல் எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கான பிரேரணையை நாளை(21) அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் நாட்களில் எரிபொருள் ஒதுக்கீட்டைத் தவிர்த்து சாதாரணமாக எரிபொருளை விடுவித்ததன் பின்னர், நாளாந்த அடிப்படையில் எரிபொருள் விலையை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,793 என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப்பின் (UNICEF) அறிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இவ்வருடம் 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 4.8 மில்லியன் சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என யுனிசெப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என்றும் 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து இலங்கை குடும்பங்களில் இரண்டு குடும்பங்கள் தமது மாத வருமானத்தில் 75 வீதத்தை உணவுக்காக செலவிடுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட உரையை பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 43 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்பார்ப்பை இந்த வரவு செலவுத் திட்ட உரை தகர்த்தெறிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜாஎல தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் சனிக்கிழமை மாலை (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வலுவான எதிர்காலத்தை உருவாக்க நாட்டின் ஆட்சியாளர்கள் ஊக்கம் அளிப்பார்கள் என்றே மாணவர்கள் நம்பினர் எனவும், தங்களுக்கு மதிய உணவு வழங்க நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த போதும் அது அவ்வாறு நடக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். பாடசாலைப் புத்தகப் பைகள், கொம்பஸ் பெட்டிகள் உட்பட அனைத்துப் பாடசாலை சிறுவர்களுக்கும் தேவையான பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நேரத்தில், அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் இந்நாட்டை ஆட்சி செய்யும் பொருளாதாரக் கொலைகாரர்கள், நாட்டை சீரழித்துக் குவித்தவர்கள் அமைச்சுச் சலுகை வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.…
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் இன்று (21) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும் எனவும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்தார்.
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அட்டைகளை வழங்கும் இலக்கை அடையும் வரை மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 1,700 அட்டைகளை அச்சிடும் திறன் திணைக்களத்துக்கு உள்ளதால், ஒரு நாள் சேவையில் 50 அட்டைகளையும் 1650 அட்டைகளை 6 இலட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்காகவும் அச்சிடவுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். திணைக்களத்தின் கொள்ளளவை ஈடுசெய்யும் வகையில் 5 இலட்சம் அட்டைகள் கிடைத்துள்ளதாகவும், கடந்த திங்கட்கிழமை (14) முதல் அட்டைகளை அச்சிட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.