அடுத்த மாதம் முதல் எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கான பிரேரணையை நாளை(21) அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் ஒதுக்கீட்டைத் தவிர்த்து சாதாரணமாக எரிபொருளை விடுவித்ததன் பின்னர், நாளாந்த அடிப்படையில் எரிபொருள் விலையை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.