தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 25 வருட வெள்ளி விழாவும் உலக மீனவ திண விழாவும் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க ஏற்பாட்டாளர் ஹேமன் குமார் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் உலக மீனவ மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய பிராந்திய பிரதிநிதியான இந்திய மீனவ மக்கள் பேரவையைச் சேர்ந்த திருமதி ஜேசிரத்னம் கிரிஸ்டி, ஜோன் ஸ்டாடகஸ் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உட்பட பல மாவட்டங்களிலிருந்தும் மீனவ பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
ஆர்பாட்டக்காரர்கள் நீல நியாயத்துவத்தின் ஊடாக சிறு மீனவன் மற்றும் உணவு தன்னாதிக்கத்தை வலுப்படுத்துவோம் எனும் கருப்பொருளில் நடந்த இந்நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன் மீனவர் பிரதிநிதிகள் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சுலோகங்களை கோஷித்த வன்னம் பேரணியாக கூட்டமண்டபத்தை வந்தடைந்தனர்.
நீல பொருளாதார தேவி ஏற்கும் சிறு மீனவனுக்கு இடமில்லை., அடக்கு முறையை பயன்படுத்துவதால் மக்களின் பிரச்சிணைக்கு தீர்வு கிடைக்குமா?, இடம் பெயர்ந்த மக்களின் காணிகளை மீள கையளிக்கவும்., பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாமல் செய், தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரையும் விடுதலை செய், மக்கள் அடக்கு முறையை நிறுத்து போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.