Author: admin

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளது. இன்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நாட்டின் அனைத்து முதலீட்டு வலயங்களி லுமுள்ள 140,000க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக வர்த்தக வலய ஊழியர்க ளுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. மே 8 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவாக 1,48,000 தொழிலாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க மாட்டார்கள் என அந்த அமைப்பின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த ராஜபக்ஷ பரம்பரையை விரட்டியடிக்க நாட்டு மக்கள் வீதியில் இறங்குகிறார்கள். இந்த நேரத்தில் உழைக்கும் மக்களாகிய நாம் அத்தகைய தலைவர்களின் கீழ் வாழ விரும்பவில்லை. இன்று எமது ஊழியர்களுக்கு உண்பதும் குடிப்பதும் போதுமானதாக இல்லை மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு போதுமான சம்பளம் இல்லை. ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறும் உழைக்கும் மக்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எமது நாட்டில் ஏழு மில்லியன் உழைக்கும் மக்கள் உள்ளனர். எங்களுடன் இருக்கும் அரசாங்கத்துக்கு இது எளிதாக…

Read More

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை, கூட்டு ஆதனங்களின் பெறுமதி 75,000 டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கும் நீண்ட கால வதிவிட வீசா வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More

மின்சாரக் கட்டணதத்தை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கையின் மின்சார சபையால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையினை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையினது மின்சார சபையின் நாளாந்த இழப்பாக சுமார் 500 பில்லியன் ரூபாவாகும், இப்போது நாம் செய்ய வேண்டிய விடையமாகும், உற்பத்தி செலவுக்கு ஏற்றார் போல் விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துவது தான் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமுல்படுத்தாவிட்டால் அடுத்த வாரம் நாடு தழுவிய ரீதியில் பேரூந்து சேவைப்புறக்கணிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்;துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்,ஏற்கனவே ஏப்ரல் 4ஆம் திகதியன்று தங்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்துமாறு பீடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்மொழிவுகள் தொடர்பில் அரசியல் தலைமைகள் செயற்படத் தவறினால், பௌத்த சங்க மாநாடு ஒன்று கூட்டப்பட்டு பிரகடனம் வெளியிடப்படும் என்றும் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் நடப்பு அரசாங்கத்திடம்; பொருளாதாரத்தை மீட்பதற்கான சரியான திட்டம் எதுவும் இல்லாத நிலையில்,அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. இதனால் ஏனைய துறைகளை போன்று பேரூந்து துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. செவிப்புலனற்ற, பார்வையற்றவர்களைப் போல மக்களால் வாழ முடியாது. எனவே, இந்த…

Read More

கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவ உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

இன்று முதல் சீமெந்தின் விலை அதிகரிப்புல் அமுலாகும் வகையில் சீமெந்து பக்கெட் (50Kg) ஒன்றின் விலை Rs. 400 இனால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை: Rs. 2750/-

Read More

அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையில், இரும்பு கொள்வனவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அரசுக்கு ஆதரவான பலர் இருப்பதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, இந்தியா வழங்கிய கடன் தொகையில் ஏற்கனவே 250 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது 750 மில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய மேலுமொரு கப்பல் அடுத்த மூன்று நாட்களில் இலங்கையை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. டீசல், சுப்பர் டீசல், ஒக்டேன் 92 மற்றும் 95 வகையான பெற்றோல் மற்றும் மசகு எணணைய் என்பன போதுமான அளவு இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பல மாதங்களாக நீடித்து வந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காணப்பட்டவரிசைகள், தற்போது படிப்படியாகக் குறைந்துள்ளன. போதிய அளவு எரிபொருட்கள் கிடைத்தவுடன், இந்த நிலைமை முடிவுக்கு வரும் என்றும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 24 மணி நேர எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் செயல்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, அவசர உதவியாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம், இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More