மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, அவசர உதவியாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம், இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.