Author: admin

பொத்துவில் பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, வாழைக் காய்களுக்கு இரசாயன திரவம் உபயோகித்து அதனை பழுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஸி.றிஸ்வான் சந்தேக நபர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவருக்கும் தலா 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார். அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தில் பழங்களை பழுக்க வைப்பதற்காக இரசாயன திரவம் பயன்படுத்தப்பட்டு வருதாகவும் இதனால் அவ்வாறான மருந்து தெளிக்கப்பட்ட பழங்களை உண்பதால் பக்க விளைவுகளான வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலையே இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் எம்.எஸ்.எம்.மலீக்…

Read More

கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண்பதே முக்கியம் என சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும், அதற்காக இளைஞர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More

அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு, அறிவிக்கப்படும் என உலகளாவிய சட்ட நிறுவனமான, கிளிஃபோர்ட் சான்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தெளிவூட்டல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைய வழியாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட பல நாடுகளிடம் இலங்கை கடனைப் பெற்றுள்ளது. அத்தோடு இறையாண்மை பத்திரங்களிலும் கடன்களை பெற்றுள்ள நிலையில் சுமார் 50 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“பொருட்களின் விலையை உடனடியாக குறை என்ற தொனிப் பொருளில் ஹட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்க்கிழமை) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், தோட்ட தொழிலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர் பங்கேற்றனர். இதேவேளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணம் எங்கே, , மக்கள் வீதியில் , அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை இல்லாதொழி, என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Read More

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியிலிருந்து மொஹமட் சமி விலகியுள்ளார். இந்நிலையில், 2 வருடங்களுக்கு பிறகு உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Read More

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதியை வரவேற்பதற்காக இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும், பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்திய பணிப்பாளருமான பென் மெல்லர், பிரித்தானிய மன்னரின் விசேட தூதுவர் பிரதி லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வருகைத் தந்திருந்தனர். நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (21) நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டில் இல்லாத காரணத்தினால், அவரது அமைச்சு பொறுப்புக்களை நிர்வகிக்க இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன், பதில் நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய…

Read More

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த மூன்று நாட்களில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் சனிக்கிழமை (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மக்கள் பார்வையிடலாம். எவ்வாறாயினும், இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

Read More

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 2022 ஆசியக் கோப்பையை தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 2022-ம் ஆண்டு தொடரை வெல்வதன் மூலம், தேர்வாளர்களின் பணி ஒப்பீட்டளவில் எளிதாக்கப்பட்டுள்ளது. அணிக்கு திரும்பிய குறிப்பிடத்தக்கவர் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, அதே வேளையில் ஆசியக் கோப்பையில் இலங்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மட்டையுடன் கேமியோவாக இருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ தவறவிட்டார். டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வை நாங்கள் உன்னிப்பாகப் பார்க்கிறோம். 1 . T20 அணியில் விக்கெட் கீப்பர்களாக குசல் மெண்டிஸ் மற்றும் பானுகா ராஜபக்சவை SLC அறிவித்துள்ளது. உலகக் கோப்பைக்காக முழு நேர விக்கெட் கீப்பர்கள் இல்லாத இலங்கை அணி விளையாடுவது இதுவே முதல் முறை. குசல் மெண்டிஸ் விக்கெட்டுக்கு பின்னால் ஒரு கண்ணியமான வேலையைக் கொண்டிருந்தார், மேலும் அது உலகக் கோப்பையிலும் தொடரும்…

Read More

“பிரஞ்சு ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படும் ஆலியன் ரொபர்ட், பாரிஸில் உள்ள 48 மாடி வானளாவிய கட்டடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். உலகின் உயரமான கட்டிடங்களான சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலம், டுபாயின் புர்ஜ் கலிபா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் ஏறி சாதனை படைத்த 60 வயதான ஆலியன் ரொபர்ட், சுமார் 187 மீற்றர் உயரம் கொண்ட கட்டடத்தில் எவ்வித பிடிமானமும் இல்லாமல், விறு விறு என மேலே ஏறினார்.

Read More

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், எரிபொருளின் விலை ஏன் குறைக்கப்படவில்லை என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்ததாக LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்தபடி விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

Read More