“பிரஞ்சு ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படும் ஆலியன் ரொபர்ட், பாரிஸில் உள்ள 48 மாடி வானளாவிய கட்டடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
உலகின் உயரமான கட்டிடங்களான சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலம், டுபாயின் புர்ஜ் கலிபா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் ஏறி சாதனை படைத்த 60 வயதான ஆலியன் ரொபர்ட், சுமார் 187 மீற்றர் உயரம் கொண்ட கட்டடத்தில் எவ்வித பிடிமானமும் இல்லாமல், விறு விறு என மேலே ஏறினார்.