Author: admin

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கமும் மக்களின் கருத்துக்கு எதிராக அமையும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஒரு மாதம் கூட வாழ முடியாது என்றும் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். “ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு வந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் மூளையாக செயற்பட்டவர் இவர்” என அவர் வெளிப்படுத்தியுள்ளார். நாட்டை அழிப்பதில் பெயர்பெற்று புதிய அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு அனுப்பப்பட்டவருக்கு அதே அரசாங்கத்தினால் தற்போது பிரதமர் பதவி வழங்கப்படுகின்றதென்பது அவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதையே இது காட்டுவதாகவும் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தாம் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதாகவும், மற்றவர்களை அரசாங்கத்தை கைப்பற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்த சில்வா, அவரின் வார்த்தைகளை நம்புவதற்கு எவரும் தயாராக…

Read More

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Read More

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர்களான 1️⃣ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2️⃣பவித்ரா வன்னியாராச்சி 3️⃣ரோஹித அபேகுணவர்தன 4️⃣சி.பி.ரத்நாயக்க 5️⃣நாமல் ராஜபக்ஷ 6️⃣ சனத் நிஷாந்த ஆகியோரே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் வேறு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Read More

Phone ஐ 100% Charge யில் போடுவது பெருமையா, இல்ல கடமை. அப்புடி எண்டு சில பேர் நினைச்சுகிட்டு விடிய விடிய அந்த அப்பாவி Phone ஆஹ் Charge ல போட்டு கொல்லுறாங்க. அது தான் நாம் முதல் செய்யும் தவறு. உங்க Phone ல நல்லா Charge நிக்கவேண்டும் என்றால் உங்க Phone Charge 20% ஆனதும் Charge யில் போட்டுவிடுங்கள். 80% – 90% வரை Charge ஏறிய பின் Charge யில் இருந்து கழட்டி விடுங்கள். உங்க போன் Battery வேற லெவல் ல வேலை செய்யும்.Normal Phone ற்கு Fast Charger பயன்படுத்தாதீர்கள். கூடிய சீக்கிரமே மண்டைய போட்டுடும் உங்க Phone. Phone உடன் வரும் Charges, Cables மாத்திரமே பயன்படுத்துங்கள். Kitchen உள்ளே வைத்தோ அல்லது அதிக அளவிலான வெப்பம் வர கூடிய இடங்களில் வைத்து Phone ஐ Charge பண்ணாதீங்க. இவ்வளவும் செய்ங்க…

Read More

நம்ம Smart Phone பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் Install செய்யும் Apps ஆலே நம்ம Smart Phone க்கு ஆப்பு என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். Android Smart Phone கோ அல்லது IOS Smart Phone கோ Anti Virus App என்று ஒன்று தேவையே கிடையாது. Anti Virus App மட்டுமல்ல எந்த வித Phone Speed அல்லது Phone Cleaning Apps தேவையே கிடையாது. அவை அனைத்துமே உண்மையில் உங்கள் Smart Phone ஐ Slow ஆக்குகிறது அத்துடன் உங்களை வைத்து உழைக்கிறார்கள். சில நேரங்களில் உங்கள் Smart Phone யில் உள்ள விடயங்களை திருடுகிறார்கள். உங்களை பயம் காட்டுவதற்காக நான் கூறவில்லை உண்மையிலேயே நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே உண்மையில் நடக்கின்ற விடயங்களை கூறுகின்றேன். ஆகவே அவ்வாறான Apps கள் உங்கள் Smart Phone யில் Install பண்ணி…

Read More

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்கே தெரிவாகஉ‌ள்ளா‌ர். இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க முடியும். இலங்கையில் கலவரம் வெடித்ததால், திங்கள்கிழமை பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவின் இராஜினாமாவின் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் பதவி வெற்றிடமாக உள்ளதுடன், ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான அரசியல் முட்டுக்கட்டையும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல்…

Read More

இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே உள்ளது என இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் (SLPPTOA) இன்று தெரிவித்துள்ளது. சங்கத்தின் இணைச் செயலர் டி.வி. நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சாந்த சில்வா சுட்டிக்காட்டினார். இதன்மூலம், அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட டீசல் கையிருப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கொலொனாவ மற்றும் முத்துராஜவெல சேமிப்பு முனையங்களில் போதியளவு பெற்றோல் இருப்பு உள்ளதாகவும் சாந்த சில்வா தெரிவித்தார். தற்போதுள்ள இருப்புகளின்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான பெட்ரோல் உள்ளது, என்றார். எவ்வாறாயினும், இன்றும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

Read More

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12) அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி ,இன்று(12) பிற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். வட்டரெக்க சிறைச்சாலை கைதிகள் சிலர், கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நாளை(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்று(11) ஆணைக்குழுவில் ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் முன்வைத்த விடயங்களின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார். மேலும்,நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதல்கள்…

Read More

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொய்யான பிரசாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இன்று (12) காலை 08 மணி முதல் ரயில் போக்குவரத்தை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, வெயாங்கொடை மற்றும் களுத்துறை இடையிலான ரயில் போக்குவரத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்படும் என திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த ரயில் சேவை தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் வாடிக்கையாளர் பிரிவின் 1971 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகளை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை முன்னெடுக்கும் அளவுக்கு போதிய நேரம் இல்லை என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மாகாணங்களுக்கு இடையில் தனியார் பஸ் சேவைகளை இன்று(12) முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ​ஜெனரல் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

Read More