நம்ம Smart Phone பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் Install செய்யும் Apps ஆலே நம்ம Smart Phone க்கு ஆப்பு என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். Android Smart Phone கோ அல்லது IOS Smart Phone கோ Anti Virus App என்று ஒன்று தேவையே கிடையாது. Anti Virus App மட்டுமல்ல எந்த வித Phone Speed அல்லது Phone Cleaning Apps தேவையே கிடையாது.
அவை அனைத்துமே உண்மையில் உங்கள் Smart Phone ஐ Slow ஆக்குகிறது அத்துடன் உங்களை வைத்து உழைக்கிறார்கள். சில நேரங்களில் உங்கள் Smart Phone யில் உள்ள விடயங்களை திருடுகிறார்கள். உங்களை பயம் காட்டுவதற்காக நான் கூறவில்லை உண்மையிலேயே நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே உண்மையில் நடக்கின்ற விடயங்களை கூறுகின்றேன்.
ஆகவே அவ்வாறான Apps கள் உங்கள் Smart Phone யில் Install பண்ணி இருந்தால் உடனே Uninstall செய்துவிடுங்கள். உங்கள் போன் யில் நன்றாக Charge நிக்க வேண்டும் என்றால் எனது உங்க Phone ல Charge நல்லா நிக்க இத செய்ங்க என்ற பதிவை பாருங்கள்.
அடுத்து, நீங்கள் பயன்படுத்தும் Browsers. Internet பாவிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் அனைத்து Browsers களும் பாதுகாப்பானது கிடையாது. Google Chrom, Firefox அல்லது Smart Phone உடன் வரும் Browsers மாத்திரம் பயன்படுத்துங்கள். Dolphin, UC Browser போன்ற Browsers உங்களது தரவுகளை திருடுகின்றனர். உங்களது விபரங்களை திருடி வருமானங்களுக்காக உபயோகப்படுத்துகின்றனர்.
Browsers மாத்திரம் இல்லை, நீங்கள் பயன்படுத்தும் அழகு சம்மந்தப்பட்ட Apps களும் தான். ஆகவே, அனாவசியமான தேவைகளுக்காக அதிக அதிகமாக Apps களை உபயோகிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ளுங்கள். ஒரு App ஒன்றை உருவாக்கி அதை பராமரிப்பது என்பது இலசுப்பட்ட காரியமல்ல. அதற்கு பல ஆயிரம் பணத்தை செலவு செய்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவு செய்து, உங்களுக்கு இலவசமாக ஒரு விடயத்தை தருகிறார்கள் என்றால், சற்று சிந்திக்க வேண்டும்.
அதற்காக இலவசமாக கிடைக்கின்ற அனைத்து App களும் தவறான Apps களும் இல்லை. தேவைக்கு ஏற்ப நன்றாக தேடி சரியான App ஐ தேர்ந்தெடுத்தால் நன்று. சரியான App ஐ தேர்ந்தெடுப்பது எவ்வாறு? என்று ஓர் பதிவு வேண்டுமா? Comment யில் சொல்லுங்கள்.
By: Nowfer Rifkan