Author: admin

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் மற்றும் புதுப்பிப்பதற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படும், பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கட்டண அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்திய போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலகு ரக அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக்கான கட்டணம் ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சிறுநீர் பரிசோதனை தவிர்ந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை கட்டணம் ஆயிரத்து 500 ரூபாவாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்திய போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Read More

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உணவு பொருட்களில் பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பதுளை உள்ளிட்ட சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளின் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி என்பன அழிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 6ஆம் திகதியுடன் சில பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் காலாவதி திகதி அண்மித்துள்ள பொதிகள் இன்னும் சில பகுதிகளில் மக்களுக்கு உரிய காலத்தில் விநியோகிக்காது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சில பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி என்பன குறிக்கப்படும் இடத்தில் இந்த பொதி விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் பாரிய சேதங்களை எதிர்க்கொண்டுள்ளது. அத்தோடு, தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பெருந்தெருக்கள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாவலப்பட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக இடிந்து விழுந்த நாவலப்பிட்டி – இங்குருஓயா பாலத்தை இதன்போது அவர் பார்வையிட்டதோடு, வட்டவளை ஹைட்ரி தோட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் அழைப்பின் பேரில் அப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாவலப்பிட்டி – இங்குரு ஓயா பாலம் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக இங்குரு ஓயா பகுதிக்கு செல்ல முடியாத நிலை குறித்து மகக்ளிடம் கேட்டறிந்தார். இந்த விஜயத்தின்…

Read More

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாம் அபிஷேக் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில் நடிகை மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக மீரா மிதுனுக்கு 2-வது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வருகிற 29 ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது…

Read More

“உரிய தகவல்கள் கிடைத்தவுடன் அமைச்சகம் அடுத்த வாரத்திற்குள் தனி QR குறியீட்டில் கூடுதல் ஒதுக்கீடுகளை ஒதுக்கும். அதுவரை இலங்கைப் போக்குவரத்துச் சபை (CTB) டிப்போக்கள் 107 CTB டிப்போக்களில் இருந்து தனியார் பேருந்துகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும், மேலும் டாக்சிகள் இந்த வாரம் நிலையான ஒதுக்கீட்டைப் பெறும்,” என்று காஞ்சனா விஜேசேகர   ஒகஸ்ட் 8ம் திகதி திங்கட்கிழமை ஒரு ட்வீட்டில் கூறினார். சி.டி.பி, தனியார் பேருந்துகள் மற்றும் டாக்சிகளின் தேவைகளை அடையாளம் காணும் நோக்கில், போக்குவரத்து அமைச்சில் திங்கட்கிழமையன்று கலந்துரையாடல் நடைபெற்றது. “ஒவ்வொரு தேவைகளையும் போக்குவரத்து ஆணையகத்தால் அடையாளம் காணவும், எரிபொருள் தேவைகளை எரிசக்தி அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கவும் முடிவு செய்யப்பட்டது” என்றும் விஜேசேகர கூறினார்.

Read More

கஹதுடுவ, ரிலாவல பிரதேசத்தில் நேற்று (07) மாலை மிகவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் ஒன்றுடன் மோதிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

சிங்கராஜ மழைக்காடுகளை அகற்றி நீர்த்தேக்கங்கள் அல்லது வீதிகள் அமைக்கப்படமாட்டாது என வனப் பாதுகாப்பு திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றில் திங்கட்கிழமை (8) உறுதியளித்துள்ளது. சிங்கராஜ வனச்சரகத்தில் உள்ள அரச வன நிலங்களை அகற்றுவது, நீர்த்தேக்கங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி என்பவற்றை நிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வனப் பாதுகாப்புத் துறை சார்பில் ஆஜரான மூத்த அரசு வழக்கறிஞர், சாலைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட எந்தவொரு திட்டத்திற்கும் சிங்கராஜா மழைக்காடுகள் தீண்டப்படாமல் இருக்கும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இவ் விண்ணப்பம் செப்டம்பர் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.

Read More

சமகி ஜன பலவேகய (SJB) கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கயான் டி மெல் பிலியந்தலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற பொது அமைதியின்மையின் போது பதிவாகிய ஆறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். SJB உறுப்பினர் இன்று (8) பிலியந்தலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஜோசப் ஸ்டாலின் ஒகஸ்ட் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Read More

ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் கூறியிருந்ததை அடுத்து, தற்போது இதனை சுமந்திரன் மறுத்துள்ளதோடு, ஜனாதிபதி பொய் கூறியதாகவும் டுவிட் செய்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ டலஸ் அலகபெருமவுக்கு வாக்களிப்பதாக எடுத்த தீர்மானம் ஒன்றுபட்ட கருத்து, ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை கூட்டத்தில் எந்தக் கட்டத்திலும் யாரும் கூறியிருக்கவில்லை.” எனவும் சுமந்திரன் டுவிட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More