தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உணவு பொருட்களில் பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பதுளை உள்ளிட்ட சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளின் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி என்பன அழிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த 6ஆம் திகதியுடன் சில பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் காலாவதி திகதி அண்மித்துள்ள பொதிகள் இன்னும் சில பகுதிகளில் மக்களுக்கு உரிய காலத்தில் விநியோகிக்காது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சில பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ள பால்மா பொதிகளில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி என்பன குறிக்கப்படும் இடத்தில் இந்த பொதி விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.