சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் மற்றும் புதுப்பிப்பதற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படும், பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கட்டண அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்திய போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலகு ரக அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக்கான கட்டணம் ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சிறுநீர் பரிசோதனை தவிர்ந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை கட்டணம் ஆயிரத்து 500 ரூபாவாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்திய போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.