Author: admin

முட்டை , கோழி இறைச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலை என்பன சடுதியாக அதிகரித்துள்ளமையால் அவற்றின் விலை மற்றும் அதன் செலவுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Read More

மின்சார கட்டண அதிகரிப்பினால் அனைத்து மக்களினாலும் கட்டணத்தை ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் மின்சாரக் கட்டணச் சலுகை பெறுவதற்குரிய தகுதியான குழுக்கள் தொடர்பில் தற்போது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

பல விவசாய சங்கங்கள், இலங்கையின் விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சிடம் மர அணிலை நாட்டின் தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளன. பயிர்ச்செய்கையை அச்சுறுத்தும் விலங்குகளின் பட்டியலில் மர அணில் முதலிடத்தில் இருப்பதாகவும், இலங்கையின் தேசிய விலங்காக மர அணில் பெயரிடப்பட்டுள்ளதால், அச்சுறுத்தலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மரஅணிலுக்குப் பதிலாக மற்றொரு உள்ளூர் இனத்தை கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய மரபுரிமைகள் தொடர்பான ஆலோசனைக் குழு உட்பட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இந்த விடயம் கலந்துரையாடப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். இம் மர அணிலானது இலங்கையில் தென்னை மற்றும் கொக்கோ பயிர்ச்செய்கைகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

Read More

க.பொ.தர உயர்தர மாணவர்களின் வருகை தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, 2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையின் அவசியத்தன்மை கருதப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

Read More

கடந்த ஜூலை 9 ஆம்திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சமூகவலைத்தளங்கள் மற்றும் சிசிடீவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள், 071-8591559, 071-8085585, 011-2391358 அல்லது1997 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Read More

கடுதாசி தட்டுப்பாடு, சூழல் பாதுகாப்பு , சேமிப்பு , தொழில்நுட்ப பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது சிறந்த தீர்மானம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் அனைவரும் தமது கட்டணங்களை ‘மின் இதழ் கட்டண பட்டியல் (e- Bill)’என்ற நவீன முறையின் மூலம் செலுத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் வசிப்பதற்கான அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் பல்வேறு இடங்களில் மறைந்திருந்தவாரு பாதுகாப்புக் கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான அவருக்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சதி காரணமாக நாடு கடத்தப்பட்டாரா எனக் கண்டறியக் கோரி கடந்த ஜூலை 18ஆம் திகதி காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்திலிருந்து விலகியுள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

Read More

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (12) நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், தனிஷ் அலி உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Read More

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் Michael Appleton ஐ சந்தித்தார். உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தனது டுவிட்டர் செய்தியில், இலங்கையின் பொருளாதாரத்தில் பணம் அனுப்பும் பங்கு, தொழிலாளர் உறவுகளை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுகள், பல கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் இலங்கையில் இருந்து வழமையான மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அமைக்கப்படவுள்ள வேலை வாய்ப்புகள், தகுதிகள், அவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் நியூசிலாந்து தொடர்பான பிற இடம்பெயர்வு தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய வள மையத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெருமளவிலான இலங்கையர்கள் இடம்பெயர முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது, அதேவேளை உயர் ஸ்தானிகராலயத்திற்கு தற்போது மாணவர் வருகை, மற்றும் வீசாக்களுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன. இதன்மூலம், வேலை வாய்ப்புக்காக நியூசிலாந்திற்கு இடம்பெயர அல்லது பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வள மையம் வழங்கும் என அமைச்சு…

Read More

லுணுகல, உடகிருவ வனப் பகுதியில் உள்ள பிரதேசத்தில், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து,14 வயதுக்குட்பட்ட சிறுமியைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய இச் சிறுமி கடந்த ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்தேகநபர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறுமியை கடத்திச் சென்று 08 நாட்களாக உடகிருவ வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட உள்ளார்.

Read More